Syama Sastry Kriti - Nilayatakshi - Raga Paraju
நீ(லா)ய(தா)க்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ
அனுபல்லவி
பா2(லா)க்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)
சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3ன(மீ)யவே ஸாம
கா3ன லோலே அபி4மான(மீ)யவே தே3வீ (நீல)
சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனி(கை)ன ரா(தி3)க(னே)மி ஜெப்புது3 தே3வீ (நீல)
சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்(மா)ர்த2
காம மோக்ஷ(மி)ச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)
பாடல் பொருள்
பல்லவி
கருந்தடங்கண்ணீ! நீயே உலக சாட்சி.
அனுபல்லவி
நெற்றிக் கண்ணனின் ராணீ! அண்டியோர் வரிசையினைப் பேணுபவளே!
சரணம் 1
எளியோரைக் காப்பவளே! அபயமெனும் கொடையருள்வாயம்மா. சாம
கானத்தில் மகிழ்பவளே! தன்னவனெனும் பற்று அருள்வாயம்மா, தேவீ!
சரணம் 2
ஆதி சக்தியே! கௌமாரியே! மேதினியில், உன்னைப் புகழ,
ஆதி சேடனுக்காகிலும் வாராது; மேற்கொண்டு, என்ன சொல்வேன், தேவீ!
சரணம் 3
மன்மதனைக் காத்தவளே! கேளாய். உனது நாமங்களே, அறம், பொருள்,
இன்பம் மற்றும் வீடு அளிப்பவை. சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே, தேவீ!
கருந்தடங்கண்ணி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்
அபயம் - புகல்
சாம கானம் - சாமன் எனும் மறையோதல்
அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு - இவை புருஷார்த்தங்கள் எனப்படும்.
பாடல் பதம் பிரிப்பு
பல்லவி
நீல-ஆயத-அக்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ
அனுபல்லவி
பா2ல-அக்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)
சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3னமு-ஈயவே ஸாம
கா3ன லோலே அபி4மானமு-ஈயவே தே3வீ (நீல)
சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனிகி-ஐன ராது3-இகனு-ஏமி ஜெப்புது3 தே3வீ (நீல)
சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்ம-அர்த2
காம மோக்ஷமு-இச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)
No comments:
Post a Comment