16 Dec 2020

நீலாயதாட்சி அம்மன் திருப்பள்ளியெழுச்சி



1. பூ விரிந்து வாசமிடும் 
                 பூபாள நேரம்
புள்ளினம் பாட்டிசைத்து 
         பண் பாடும் வானம்
புன்னகைத்துப் பகலவன் 
    இருளகற்றும் வேளை
பாவையே நீலாயதாக்ஷி 
    திருப்பள்ளி எழுவாயே!

2. மங்கல இசை நாதம் 
       மாதா உனை எழுப்பிட
செங்கமலத் திருப்பாதம் 
       பூதேவி வருடிட
தங்க மலர் கொண்டுன்னை 
      தரிசிக்க வந்தோமே
மங்களம் பொங்கிட நீலாயதாக்ஷி 
     பள்ளி எழுவாயே!

3. வண்டினம் சேர்க்கும் 
       அமுதொக்கும் மதுவும்
ஆவினம் அருளும் 
     புனிதமிகு பாலும்
நேசமுடன் வாசமிகு அமுத 
     நீரும் வைத்தோம்
நீராட நீலாயதாக்ஷி 
  பள்ளி எழுவாயே!

4. விண்ணவர் மண்ணவர் 
       வியந்துநின் பார்வை பெற
பண்ணொடு பாசுரம் 
   வேதமும் ஓதி நிற்க
வண்ணமிகு வாசமலர் 
    சூட்ட வந்தோம்
கண்ணழகுத் தாயே நீலாயதாக்ஷி 
   பள்ளி எழுவாயே!

5. காயாரோகணன் காயத்தில்      
       கலந்தவள் நீ
மாயப் பிறப்பின் மயக்கம் 
      அறுப்பவள் நீ
சேயெங்கள் துயரம் 
    துடைப்பவள் நீ
தூயவளே நீலாயதாக்ஷி 
  பள்ளி எழுவாய் நீ!

6. உயிரின் காற்றை 
   உன்னகம் கொண்டவளே
உயிரினம் அனைத்தும் 
   உள்ளம் குளிர்ந் துய்வுற
உய்ய நின் பாதம் 
    போற்றிப் மகிழ்ந்திட
உயர்ந்தவளே நீலாயதாக்ஷி, 
    பள்ளி எழுவாயே!

7. தேடித் தேடி வந்தோமே 
       தேவி நின் தாள் பணிய
ஓடி ஓடி வந்தோமே 
     நின்னருள் பெற்றிட
வாடி வாடி நிற்குமெங்கள் 
    வேதனை களைந்திட
கோடிகோடி நமஸ்காரம் 
    நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

நன்றி: நாகை வை.ராமஸ்வாமி அவர்கள்


Neelayatakshi Suprabatham 

By Nagai.V.Ramaswamy

Translated By P.R.Ramachander

Goddess Neelayadakshi is the consort of Lord Shiva in the temple city of Thirunagai Karonam (Arulmigu Neelayadakshi Amman Samedha Shri Kayahorana Swami Temple), near Nagapattinam of Tamil Nadu. It is the one of the 108 Shakthi sthalas of India.

Neelayadakshi means Goddess with blue eyes. The lord here is called Kayarohanar, because he permitted Sage Pundareeka to ascend to the heaven along with his body. Muthuswami Deekshithar has composed a great song “Amba Neelayadakshi “praising this goddess. The author of this great stotra has also composed several krithis in her praise.

1.Poo virindu vasamidum Bhoopala neram, Pullinam pattu isaithu pan padum neram, Punnagai pagalavan irulagathum velai Pavaye Neelayadakshi palli ezhundarulvaye 

It is the time for Bhoopala, when flowers open and wave,
It is time when the birds make music and sing,
It is time that the smiling Sun removes the darkness,
Oh Lady Neelayadakshi, would you please wake up.

2.Mangala isai nadam mathaa unnai ezhuppida, Chengamala thiruppadam bhoodevi varudita, Thanga malar kondu unnai darisikka vandhome, Mangalam pongidave Neelayadakshi palli ezhuvaye. 

When the soulful sounds wake you up mother,
When your red lotus like feet is caressed by mother earth,
We have come to see you along with golden flowers,
And so Neelayadakshi would you please wake up so that good ebbs out.

3.Vandinam cherkkum amudu okkum madhuvum, Avinam arulum punidhammigu paalum, Nesamudan vasa migu amudha neerum vaithom, Neerada Neelayadakshi palli ezhuvaye. 

We have arranged, the nectar like honey collected by honey bees,
The milk conferred to us by the grace of cows,
As well the scented nectar like water,
And so Neelayadakshi, would you please wake up to take your bath.

4.Vinnavar, mannavar viyandhu nin parvai pera, Pannodu pasuram Vedamum odhi nirka, Vanna migu vasa malar choota vandhom, Kannazhugu thaye Neelayadakshi palli ezhuvaye. 

When people of heaven and earth hunger to be seen by you,
When Tamil songs of the saints and Vedas set to tune are sung
We have come to offer you scented flowers of various hues,
And so Neelayadakshi, who is the mother with pretty eyes, would you please wake up.

5.Kayarohanan kayathil kalandhaval nee, Maya pirappin mayakkam aruppaval nee, Chey engal thuyaram thudaippaval nee, Thooyavale Neelayadakshi palli ezhuvay nee. 

You are the one who has merged in to the body of Lord Kayarohana[1],
You are the one who cuts off the illusion of the illusory birth,
You are the one who removes sorrow of your children like us,
Oh pure one, Oh Neelayadakshi, would you please wake up.

6.Uyirin Kathai unnagam kondavale, Uyirinam anaithum ullam kulirndu thuyvura, Uyya nin padam pothi magizhndida, Uyarndavale Neelayadakshi, palli ezhundarulvayo. 

Oh Goddess who has kept the air of life within you,
For the sake of filling the hearts of all beings with great joy,
When they joyously praise your feet and to get salvation,
Oh great one, Oh Neelayadakshi, would you please wake up.

7.Thedi thedi vanthome deviye nin thaal paniya, Odi odi vanthome nin arul pethida, Vadi vadi nirkkum engal vedanai kalainthida, Koti koti Namaskaram Nelayadakshi palli ezhundarulvayo. 

For saluting your feet we came in search of you,
For getting your grace we came running to you,
And so remove the pain from us, who have already wilted,
Billions and billions of salutations, Oh Neelayadakshi, would you please wake up.


8 Dec 2020

தியாகராஜர் கீர்த்தனை 2 (எவரு தெலிய)



தியாகராஜ கிருதி - எவரு தெலிய - ராகம் தோடி - Evaru Teliya - Raga Todi

பல்லவி
எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அனுபல்லவி
பு4விலோ 1வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1மைனனு 2நீலாயதாக்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

சரணம் 1
கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி 3நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
4ஹருனி அட்டிட்டாடி3ஞ்சினட்டி நீ லீலலனு (எவரு)

சரணம் 2
ஹரி ப்3ரஹ்மாது3லு நின்னு 5கொல்வனா வேள ஸுர
விரி போ3ணுலந்த3முதோ 6நில்வனமர வார
தருணுலு நாட்யமுசே கொல்வனன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வனட்டி நீ த3ய(னெவரு)

சரணம் 3
நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன 7நின்னு
வினா க3தியெவரு நீல வேணி 8ப4க்துல பாலி
பா4க3தே4யமைன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி 9ப்ரியமைன நி(ன்னெவரு)

பாடல் பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
எவரு/ தெலிய பொய்யேரு/ நீ/ மஹிமலு/
எவர்/ அறிந்தனர்/ உனது/ மகிமைகளினை/

அனுபல்லவி
பு4விலோ/ வரமௌ/ நாக3/ புரமுன/ கனுகொ3ண்டி/
புவியில்/ புனித/ நாக/ புரத்தினில்/ கண்டுகொண்டேன்/

லவ லேஸ1மு/-ஐனனு/ நீலாயதாக்ஷி/ ஸாமர்த்2யமு/-(எவரு)
எள்ளளவு/ ஆகிலும்/ நீலாயதாட்சியின்/ திறமையினை/ எவர்...

சரணம் 1
கருகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கட்டி/ நிர்ஜர/ தரு/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யணிந்து/ வானோர்/ தரு/

விருலனு/ கொப்பு/ நிண்ட3/ ஜுட்டி/ ஸொக3ஸு/ மீர/
மலர்களை/ கொண்டை/ நிறைய/ சுற்றி/ சொகுசு/ மீர/

கரமுன/ சிலுகனு/ பட்டி/ அதி3யு கா3க/
கரத்தினில்/ கிளியினை/ யேந்தி/ மேலும்/

ஹருனி/ அட்டு/-இட்டு/-ஆடி3ஞ்சின/-அட்டி/ நீ/ லீலலனு/ (எவரு)
அரனை/ அப்படி/ யிப்படி/ ஆட்டிவைத்த/ அத்தகைய/ உனது/ திருவிளையாடல்களை/ எவர்...

சரணம் 2
ஹரி/ ப்3ரஹ்மா-ஆது3லு/ நின்னு/ கொல்வ/-ஆ வேள/ ஸுர/
அரி/ பிரமாதியர்கள்/ உன்னை/ சேவிக்க/ அவ்வேளை/ வானோர்/

விரி போ3ணுலு/-அந்த3முதோ/ நில்வ/-அமர/ வார/
பூங்குழலியர்/ ஒயிலாக/ நிற்க/ வானோர்/ ஆடல்/

தருணுலு/ நாட்யமுசே/ கொல்வ/-அன்னியு/ ஜூசி/
அணங்குகள்/ நாட்டியமாடி/ சேவிக்க/ யாவற்றினையும்/ கண்டு/

கருணா/ ரஸமு/ ஜில்கி/ பில்வ/-அட்டி/ நீ/ த3யனு/-(எவரு)
கருணை/ ரசத்தினை/ சிந்தி/ அழைக்கும்/ அத்தகைய/ உனது/ தயையினை/ எவர்...

சரணம் 3
நாக3/ பூ4ஷணுனிகி/ ராணிவைன/ நின்னு/
அரவு/ அணிவோனின்/ இராணியாகிய/ உன்னை/

வினா/ க3தி/-எவரு/ நீல வேணி/ ப4க்துல/ பாலி/
அன்றி/ புகல்/ யாரே/ கருங்குழலி/ தொண்டர்/ பங்கில்/

பா4க3தே4யமைன/ ஸ1ர்வாணி/ ஸந்ததமுனு/
நற்பேறாகிய/ சர்வாணி/ எவ்வமயமும்/

த்யாக3ராஜு/ பல்கின/ வாணி/ ப்ரியமைன/ நின்னு/-(எவரு)
தியாகராசன்/ கூறிய/ சொற்களை/ விரும்பும்/ உன்னை/ எவர்...


எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அ. பு4விலோ வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1(மை)னனு நீ(லா)ய(தா)க்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

ச1. கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
ஹருனி அட்(டி)ட்(டா)டி3ஞ்சி(ன)ட்டி நீ லீலலனு (எவரு)

ச2. ஹரி ப்3ரஹ்(மா)து3லு நின்னு கொல்வ(னா) வேள ஸுர
விரி போ3ணு(ல)ந்த3முதோ நில்வ(ன)மர வார
தருணுலு நாட்யமுசே கொல்வ(ன)ன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வ(ன)ட்டி நீ த3ய(னெவரு)

ச3. நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன நின்னு
வினா க3தி(யெ)வரு நீல வேணி ப4க்துல பாலி
பா4க3தே4ய(மை)ன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி ப்ரியமைன நி(ன்னெவரு)

எவர் அறிந்தனர் உனது மகிமைகளினை?

புவியில், புனித நாகபுரத்தினில் கண்டுகொண்டேன்;
எள்ளளவாகிலும், நீலாயதாட்சியின் திறமையினை
எவர் அறிந்தனர்?

1. உருக்கிய பொன்னாடை யணிந்து, வானோர் தரு
மலர்களை கொண்டை நிறையச் சுற்றி, சொகுசு மீர
கரத்தினில் கிளியினையேந்தி, மேலும்
அரனை, அப்படியிப்படி ஆட்டிவைத்த அத்தகைய உனது
திருவிளையாடல்களை எவர் அறிந்தனர்?

2. அரி, பிரமாதியர்கள் உன்னைச் சேவிக்க, அவ்வேளை வானோர்
பூங்குழலியர் ஒயிலாக நிற்க, வானோர் ஆடல்
அணங்குகள் நாட்டியமாடி சேவிக்க, யாவற்றினையும் கண்டு,
கருணைரசத்தினைச் சிந்தி, அழைக்கும் அத்தகைய உனது
தயையினை எவர் அறிந்தனர்?

3. அரவணிவோனின் இராணியாகிய உன்னை
அன்றி புகல் யாரே, கருங்குழலி! தொண்டர் பங்கில்
நற்பேறாகிய சர்வாணி! எவ்வமயமும்,
தியாகராசன் கூறிய சொற்களை விரும்பும் உன்னை
எவர் அறிந்தனர்?

நாகபுரம் - நாகப்பட்டினம்
நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் பார்வதியின் பெயர்
வானோர் தரு - பாரிசாதம்
கருணைரசம் - நவரசங்களில் ஒன்று
அரவணிவோன் - சிவன்
சர்வாணி - பார்வதி



தியாகராஜர் கீர்த்தனை 1 (கர்மமே)


தியாகராஜ கிருதி - கர்மமே ப3லவந்த - ராகம் ஸாவேரி - Karmame Balavanta - Raga Saveri - Nagappattinam Kshetra

பல்லவி
கர்மமே 1ப3லவந்தமாயா தல்லி
2காயாரோஹண ஜாயா

அனுபல்லவி
நிர்மலமகு3 நாக3 புரமுன நெலகொன்ன
3நீலாயதாக்ஷி ஸகல லோக ஸாக்ஷி (க)

சரணம் 1
த4ரனு த4னிகுல கோரினா நா
பரிதாபமுல் தீர்ப லேரைரியனி
ஸரகு3ன நே ப3யலு-தே3ரி வச்சி
பரம பாவனி நீ ஸன்னிதி4 4ஜேரினா (க)

சரணம் 2
5வாரிதி4 மதி3 க3ர்விஞ்சியீ
வஸுத4கு தா ரானெஞ்சி நின்னு
ஸாரெகு கனி 6தல வஞ்சியுண்டு3
தீ4ர-தனமு கல்கு3 நினு 7பொட3கா3ஞ்சினா (க)

சரணம் 3
காஸாஸ லேனி நா மதி3கி நீ
8கருணயே த4னமனி பலிகி
நிண்டா3ஸதோ வச்சி ஸன்னிதி4கி நிஜ
தா3ஸுடை3ன ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (க)


பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
கர்மமே/ ப3லவந்தமு/-ஆயா/ தல்லி/
ஊழ்வினையே/ வலுக்கட்டாயம்/ ஆனதா/ தாயே/

காயா-ஆரோஹண/ ஜாயா/
காயாரோகணர்/ இல்லாளே/

அனுபல்லவி
நிர்மலமகு3/ நாக3/ புரமுன/ நெலகொன்ன/
தூய்மையான/ நாக/ புரத்தில்/ நிலைபெற்ற/

நீல-ஆயத-அக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (க)
கருந்தடங்கண்ணீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/

சரணம் 1
த4ரனு/ த4னிகுல/ கோரினா/ நா/
புவியில்/ செல்வந்தரை/ கோரினாலும்/ எனது/

பரிதாபமுல்/ தீர்ப/ லேரைரி/-அனி/
பரிதாபத்தினை/ தீர்க்க/ இயலார்/ என/

ஸரகு3ன/ நே/ ப3யலு-தே3ரி/ வச்சி/
உடனே/ நான்/ புறப்பட்டு/ வந்து/

பரம/ பாவனி/ நீ/ ஸன்னிதி4/ ஜேரினா/ (க)
முற்றிலும்/ புனிதமானவளே/ உனது/ சன்னிதி/ யடைந்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 2
வாரிதி4/ மதி3/ க3ர்விஞ்சி/-ஈ/
வாரிதியோன்/ மதி/ செருக்குற்று/ இந்த/

வஸுத4கு/ தா/ ரானு/-எஞ்சி/ நின்னு/
நிலத்துள்/ தான்/ புக/ எண்ணி/ உன்னை/

ஸாரெகு/ கனி/ தல/ வஞ்சி/-உண்டு3/
எப்போழ்தும்/ கண்டு/ தலை/ தாழ்த்தி/ யிருக்கும்/

தீ4ர-தனமு/ கல்கு3/ நினு/ பொட3கா3ஞ்சினா/ (க)
தீரத்தனம்/ உடைத்த/ உன்னை/ தரிசித்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 3
காஸு-ஆஸ/ லேனி/ நா/ மதி3கி/ நீ/
பணத்தாசை/ இல்லாத/ எனது/ உள்ளத்திற்கு/ உனது/

கருணயே/ த4னமு/-அனி/ பலிகி/
கருணையே/ செல்வம்/ என்று/ உரைத்து/

நிண்டு3/-ஆஸதோ/ வச்சி/ ஸன்னிதி4கி/ நிஜ/
நிரம்ப/ ஆசையுடன்/ வந்து/ சன்னிதிக்கு/ உண்மை/

தா3ஸுடை3ன/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (க)
தொண்டனாகிய/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ ஊழ்வினையே...



ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

தூய்மையான நாகபுரத்தில் நிலைபெற்ற
கருந்தடங்கண்ணீ! அனைத்துலக சாட்சியே!
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

1. புவியில், செல்வந்தரைக் கோரினாலும், எனது
பரிதாபத்தினைத் தீர்க்க இயலாரென,
உடனே, நான் புறப்பட்டு வந்து,
முற்றிலும் புனிதமானவளே! உனது சன்னிதி யடைந்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

2. வாரிதியோன், மதி செருக்குற்று, இந்த
நிலத்துள் தான் புக எண்ணி, உன்னை
எப்போழ்தும் கண்டு, தலை தாழ்த்தியிருக்கும்,
தீரத்தனமுடைத்த, உன்னை தரிசித்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணேசுவரர் இல்லாளே!

3. பணத்தாசை இல்லாத எனதுள்ளத்திற்கு, உனது
கருணையே செல்வமென்று உரைத்து,
நிரம்ப ஆசையுடன் வந்து சன்னிதிக்கு, உண்மைத்
தொண்டனாகிய இத்தியாகராசனுக்கு
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

காயாரோகணர் - திருநாகைக்காரோணம் - நாகப்பட்டினம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
கருந்தடங்கண்ணி - நீலாயதாட்சி
வாரிதியோன் - கடல்

முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை 2 (அம்பா நீலாயதாக்ஷி)



Dikshitar Kriti - Amba Neelaayathaakshi Karunaa - Raga Neelambari

அம்பா3 நீலாயதாக்ஷி - ராக3ம் நீலாம்ப3ரி - தாளம் ஆதி3

பல்லவி
அம்பா3 நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி
அகி2ல லோக ஸாக்ஷி கடாக்ஷி

அனுபல்லவி
பி3ம்பா3த4ரி சித்ப்ரதி-பி3ம்பா3த4ரி
பி3ந்து3 நாத3 வஸ1ங்கரி ஸ1ங்கரி
(மத்4யம கால ஸாஹித்யம்)
அம்பு3ஜா ரமண ஸோத3ரி அதி ரதி2
அம்ப3ரி காத3ம்ப3ரி நீலாம்ப3ரி

சரணம்
ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர வாஸினி ஸ்1ரித ஜன விஸ்1வாஸினி
ஸி1வ காயாரோஹணேஸோ1ல்லாஸினி சித்3ரூப விலாஸினி
நவ யோகி3னி சக்ர விகாஸினி நவ ரஸ த3ர ஹாஸினி
ஸுவர்ண-மய விக்3ரஹ ப்ரகாஸி1னி ஸுவர்ண-மய ஹாஸினி
(மத்4யம கால ஸாஹித்யம்)
பு4வனோத3ய ஸ்தி2தி லய வினோதி3னி
பு4வனேஸ்1வரி க்ஷிப்ர ப்ரஸாதி3னி
நவ மாணிக்ய வல்லகீ வாதி3னி
ப4வ கு3ரு கு3ஹ வேதி3னி ஸம்மோதி3னி

variations -
அம்பா3 - அம்ப3
அதி ரதி2 - ஆத3ரி

பாடல் பதம் பிரிப்பு

பல்லவி
அம்பா3 நீல-ஆயத-அக்ஷி கருணா கடாக்ஷி
அகி2ல லோக ஸாக்ஷி கடாக்ஷி

அனுபல்லவி
பி3ம்ப3-அத4ரி சித்-ப்ரதி-பி3ம்பா3-த4ரி
பி3ந்து3 நாத3 வஸ1ங்கரி ஸ1ங்கரி
அம்பு3ஜா ரமண ஸோத3ரி அதி ரதி2
அம்ப3ரி காத3ம்ப3ரி நீலாம்ப3ரி

சரணம்
ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர வாஸினி ஸ்1ரித ஜன விஸ்1வாஸினி
ஸி1வ காய-ஆரோஹண-ஈஸ1-உல்லாஸினி சித்3-ரூப விலாஸினி
நவ யோகி3னி சக்ர விகாஸினி நவ ரஸ த3ர ஹாஸினி
ஸுவர்ண-மய விக்3ரஹ ப்ரகாஸி1னி ஸுவர்ண-மய ஹாஸினி
பு4வன-உத3ய ஸ்தி2தி லய வினோதி3னி
பு4வன-ஈஸ்1வரி க்ஷிப்ர ப்ரஸாதி3னி
நவ மாணிக்ய வல்லகீ வாதி3னி
ப4வ கு3ரு கு3ஹ வேதி3னி ஸம்மோதி3னி

முத்துசுவாமி தீக்ஷிதர் கீர்த்தனை 1 (காயாரோஹணேஸம்)

Dikshitar Kriti - Kaayaarohanesam - Raga Deva Gandharam



காயாரோஹணேஸ1ம் - ராக3ம் தே3வ கா3ந்தா4ரம் - தாளம் - ரூபகம்

பல்லவி
காயாரோஹணேஸ1ம் ப4ஜரே ரே மானஸ
(மத்4யம கால ஸாஹித்யம்)
கலி கல்மஷாபஹம் ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2தம்

அனுபல்லவி
ப4யாபஹம் தி3க்பாலகாதி3 வினுத மஹேஸ்1வரம்
(மத்4யம கால ஸாஹித்யம்)
மாயா-மய ஜக3தா3தா4ரம் கு3ரு கு3ஹோபசாரம்

சரணம்
நீலாயதாக்ஷீ மனோல்லாஸ-கரணம்
நித்ய ஸு1த்3த4 ஸத்த்வ கு3ணம் பு4க்தி முக்தி ப்ரத3 நிபுணம்
(மத்4யம கால ஸாஹித்யம்)
பாலித ப4க்தம் பஞ்சானனம் ப்ரணத க3ஜானனம்
பா3ல சந்த்3ர ஸே1க2ரம் ப4வ பாஸ1 மோசனம் த்ரி-நயனம்

பாடல் பதம் பிரிப்பு 

பல்லவி
காய-ஆரோஹண-ஈஸ1ம் ப4ஜரே ரே மானஸ
கலி கல்மஷ-அபஹம் ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2தம்

அனுபல்லவி
ப4ய-அபஹம் தி3க்-பாலக-ஆதி3 வினுத மஹா-ஈஸ்1வரம்
மாயா-மய ஜக3த்3-ஆதா4ரம் கு3ரு கு3ஹ-உபசாரம்

சரணம்
நீல-ஆயத-அக்ஷீ மன-உல்லாஸ-கரணம்
நித்ய ஸு1த்3த4 ஸத்த்வ கு3ணம் பு4க்தி முக்தி ப்ரத3 நிபுணம்
பாலித ப4க்தம் பஞ்ச-ஆனனம் ப்ரணத க3ஜ-ஆனனம்
பா3ல சந்த்3ர ஸே1க2ரம் ப4வ பாஸ1 மோசனம் த்ரி-நயனம்


சியாமா சாஸ்திரிகள் கீர்த்தனை ( நீலாயதாக்ஷி நீவே )



Syama Sastry Kriti - Nilayatakshi - Raga Paraju

பல்லவி

நீ(லா)ய(தா)க்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ

அனுபல்லவி
பா2(லா)க்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)

சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3ன(மீ)யவே ஸாம
கா3ன லோலே அபி4மான(மீ)யவே தே3வீ (நீல)

சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனி(கை)ன ரா(தி3)க(னே)மி ஜெப்புது3 தே3வீ (நீல)

சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்(மா)ர்த2
காம மோக்ஷ(மி)ச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)

பாடல் பொருள்

பல்லவி
கருந்தடங்கண்ணீ! நீயே உலக சாட்சி.

அனுபல்லவி
நெற்றிக் கண்ணனின் ராணீ! அண்டியோர் வரிசையினைப் பேணுபவளே!

சரணம் 1
எளியோரைக் காப்பவளே! அபயமெனும் கொடையருள்வாயம்மா. சாம
கானத்தில் மகிழ்பவளே! தன்னவனெனும் பற்று அருள்வாயம்மா, தேவீ!

சரணம் 2
ஆதி சக்தியே! கௌமாரியே! மேதினியில், உன்னைப் புகழ,
ஆதி சேடனுக்காகிலும் வாராது; மேற்கொண்டு, என்ன சொல்வேன், தேவீ!

சரணம் 3
மன்மதனைக் காத்தவளே! கேளாய். உனது நாமங்களே, அறம், பொருள்,
இன்பம் மற்றும் வீடு அளிப்பவை. சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே, தேவீ!

கருந்தடங்கண்ணி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்
அபயம் - புகல்
சாம கானம் - சாமன் எனும் மறையோதல்
அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு - இவை புருஷார்த்தங்கள் எனப்படும்.

பாடல் பதம் பிரிப்பு

பல்லவி
நீல-ஆயத-அக்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ

அனுபல்லவி
பா2ல-அக்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)

சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3னமு-ஈயவே ஸாம
கா3ன லோலே அபி4மானமு-ஈயவே தே3வீ (நீல)

சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனிகி-ஐன ராது3-இகனு-ஏமி ஜெப்புது3 தே3வீ (நீல)

சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்ம-அர்த2
காம மோக்ஷமு-இச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)

7 Dec 2020

அருணகிரிநாதர் திருப்புகழ் 3 (விழுதாதெனவே)


விழுதாதெனவே  
(நாகப்பட்டினம்)



பாடல் விளக்கம்



தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

பாடல்

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.

சொல் விளக்கம்

விழுதா தெனவே கருதா துடலை ... (இறைவனருளால்) விழுகின்ற
தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல்,

வினைசேர் வதுவே புரிதாக ... வினைகளை மேலும் மேலும்
சேர்ப்பதையே விரும்புவதாக,

விருதா வினிலே ... வாழ்நாளை வீணாக்கி,

உலகா யதமேலிடவே ... (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற)
உலக வழக்கில் புத்தி மேலிட,

மடவார் மயலாலே ... பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து,

அழுது ஆகெடவே அவமாகிட ... அழுதும், கெட்டுப்போயும்,
கேவலமாகி

நாளடைவே கழியாது ... வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல்,

உனையோதி ... உன்னைப் புகழ்ந்து துதித்து,

அலர்தா ளடியே னுறவாய் ... மலர்ந்த தாமரை போன்ற உன்
திருவடிகளே எனக்கு உறவாக

மருவோரழியா வரமே தருவாயே ... பொருந்திய ஒப்பற்ற அழியாத
வரம் நீ தந்தருள்வாயாக.

தொழுதார் வினை ... தொழுகின்ற அடியார்கள்தம் வினையின்

வே ர்யோ டறவே ... வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக

துகள்தீர் பரமே தருதேவா ... குற்றமற்ற பரமபதத்தைத் தரும்
தேவனே,

சுரர்பூபதியே ... தேவர்களுக்கு அரசனே,

கருணா லயனே ... கருணைக்கு இருப்பிடமானவனே,

சுகிர்தா அடியார் பெருவாழ்வே ... புண்ணியனே, அடியார்களின்
பெருவாழ்வே,

எழுதா மறைமா முடிவே ... எழுதப்படாத மறையாம் வேதத்தின்
முடிவானவனே,

வடிவேலிறைவா ... கூரிய வேலை ஏந்திய இறைவனே,

எனையாளுடையோனே ... என்னை ஆட்கொண்டுள்ளவனே,

இறைவா எதுதா அதுதா ... இறைவனே, நீ எது தரவேண்டுமோ
அதைத் தந்தருள்.

தனையே இணைநா கையில் ... தனக்குத் தானே இணையாகும்
நாகப்பட்டினத்தில்

வாழ் பெருமாளே. ... வீற்றிருக்கின்ற பெருமாளே.

அருணகிரிநாதர் திருப்புகழ் 2 (மார்பு ரம்பினளி)

மார்பு ரம்பினளி  

(நாகப்பட்டினம்)




தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

பாடல்


மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
     டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
          மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட

வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
     பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
          வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக

சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
     பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
          தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர்

தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
     யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
          தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே

வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
          வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன்

வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
          மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா

நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
          ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல

ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
          நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.

சொல் விளக்கம்


உரம் மார்பு பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி
தரம் பொறியுடன் பணிகள் மாலை ஒண் பவளமும் பரிமள
கலவை தொங்கல் ஆட
 ... வலிய மார்பு இடத்தில் தாமரை மொக்கு
எனவும் மலை எனவும் சொல்லத் தக்க மார்பகத்தோடு, முத்து மாலையும்
படிந்த, மேன்மையான தேமலுடன், அணி கலன்களும் மாலையாய்
அணிந்த ஒளி வீசும் பவளமும் நறு மணச் சந்தனக் குழம்புடன் பூ மாலை
அசைய,

வாள் சரம் கண் இயலும் குழை த(ள்)ள அம்பு அளக பார(ம்)
தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி வாகை என்ப
இதழும் சலசம் என்ப கள(ம்) சங்கு
 ... வாள் போல அசையும் கண்
பொருந்திய (காதில் உள்ள) குண்டலங்களைத் தள்ளும் கூந்தல் பாரத்தில்
பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் வெற்றி
கொண்டன என விளங்க, வாயிதழும் தாமரை இதழ் போல விளங்க,
கழுத்து சங்கு போல் விளங்க,

மோக சார(ம்) மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம்
புனை துவண்ட இடையொடு இன்ப ரச தாழி என்ப அல்குலும்
துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர்
 ... காதலை எழுப்பும் மஞ்சள்
பூசப்பட்ட தோளும், கிளியின் நாசியைப் போன்ற நகங்களும், பட்டாடை
அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடன் இன்பத்தைத் தரும்
பாண்டம் என்று சொல்லும்படியான பெண்குறியும், தழைத்துள்ள வாழை
என்னும்படியான தொடைகளும் உடைய ரம்பை என்னும் தெய்வப் பெண்
போன்ற விலைமாதர்கள்.

தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட
மட மங்கையருடன் கலவி தாகம் உண்டு உழல்கினும்
கழலுறும் கழல் மறந்திடேனே
 ... காலில் உள்ள சதங்கை, கொலுசு
சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு நடனத்தைச் செய்யும் அழகிய
மாதர்கள் மீது கலவி தாகம் கொண்டு நான் திரிந்தாலும், போற்றப்படும்
உன் திருவடிகளை மறக்க மாட்டேன்.

வீர வெண்டைய(ம்) முழங்க வரி சங்கு(ம்) முரசோடு பொன்
பறை ததும்ப விதியும் சுரமும் வேத விஞ்சையர் உடன் குமுற
வெந்து உக அடர்ந்த சூரன் வீறு அடங்க
 ... வீர வெண்டையம்
என்னும் காலணி ஒலிக்க, இசையை எழுப்பும் சங்கும் முரசும் அழகிய
பறையும் பேரொலி செய்ய, பிரமனும் தேவர்களும் வேதம் ஓத வல்லவருடன்
கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிவதற்காக நெருங்கி வந்த சூரனின்
கர்வம் ஒடுங்க,

முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன்
குவடுமே கொளுந்த பல சிரம் தனை எறிந்து நடனம் கொள்
வேலா
 ... மேகமும் மிக ஒலிக்க, விஷத்தைக் கொண்ட ஆயிரம்
யானைகளின் பலத்தை உடைய பாம்பாகிய ஆதிசேஷனுடைய மலை
போன்ற பணாமுடிகள் வேக, அசுரர்களின் பல தலைகளை
அறுத்தெறிந்து (குடைக்) கூத்து ஆடிய வேலனே,

நார சிங்க வடிவம் கொண்டு ப்ரசண்ட இரணியோன் நடுங்க
நடனம் செய்து இலங்கை வலி ராவணன் குலம் அடங்க சிலை
கொண்ட கரர் தந்த மூல ஞான மங்கை
 ... நரசிங்க வடிவத்தைக்
கொண்டு கடுமை கொண்ட இரணியனை நடுங்க வைத்து நடனம் புரிந்து,
இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனின் கூட்டம் அடங்கி ஒழிய
(கோதண்டம் என்னும்) வில்லை ஏந்திய கைகளை உடைய திருமால்
பெற்ற ஞானம் படைத்த மங்கை,

அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை
மணந்த புய
 ... அமுத உருவினள், என்னுடைய தாய் ஆகிய குறப் பெண்
வள்ளி நாயகியை மணந்த திருப்புயத்தை உடையவனே,

நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே. ...
நாகப்பட்டினம் என்னும் அழகிய தலத்தில் அமர்ந்து விளங்குபவனே,
சிவபெருமான் போற்றும் தம்பிரானே.

அருணகிரிநாதர் திருப்புகழ் 1 (ஓல மிட்டி ரைத்தெ ழுந்த)

ஓலமிட்டிரைத்து  

(நாகப்பட்டினம்)




பாடல் விளக்கம்



தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

பாடல்


ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்

கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.

சொல் விளக்கம்


ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை ... ஓலம் இடுவதுபோல
அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல்

வட்டமிட்ட இந்த ஊர் ... சூழ்ந்திருக்கும் இந்த ஊரில்

முகில் தருக்கள் ஒன்றும் அவர் யாரென்று ... மேகத்தைப் போல்
கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல்
கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய்,

ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும் ... பேசவும்
வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும்,
முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும்

ஊனரை ப்ரபுக்க ளென்றும் அறியாமல் ... ஊனம் உள்ளவரைப்
பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து ... அழகிய
முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி,

அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன் ...
எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து
வீணே திரிகின்ற அடிநாயேன்,

கோப மற்று மற்றும் அந்த மோகமற்று ... கோபம் என்பதை
ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து,

உனைப்பணிந்து கூடுதற்கு ... உன்னைப் பணிந்து உன்
திருவடியைக் கூடுதற்கு

முத்தி யென்று தருவாயே ... முக்திநிலை என்றைக்குத்
தந்தருள்வாய்?

வாலை துர்க்கை சக்தி யம்பி ... வாலையும் (என்றும் இளையவள்),
துர்க்கையும், சக்தியும், அம்பிகையும்,

லோக கத்தர் பித்தர் பங்கில் ... உலகத்துக்கே தலைவர் ஆகிய
பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில்

மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே ... அமர்ந்தவளுமான
தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே,

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ ... கடல் வற்றிப் போக,
கிரெளஞ்சமலை தூளாகி விழ,

நெட்டயில் துரந்த வாகை ... நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி
வாகை சூடிய,

மற்புய ப்ரசண்ட மயில்வீரா ... மற்போருக்குத் திண்ணிய புயத்தை
உடைய பராக்ரமனே, மயில் வீரனே,

ஞால வட்டம் முற்ற வுண்டு ... பூமி மண்டலம் முழுமையும் உண்டு
தன் வயிற்றிலே அடக்கியவரும்,

நாக மெத்தை யிற்று யின்ற ... ஆதிசேஷன் என்னும் பாம்புப்
படுக்கையிலே துயில் கொள்பவரும்

நாரணற்கு அருட்சு ரந்த மருகோனே ... ஆகிய நாராயணருக்கு
அருள் பாலித்த மருமகனே,

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த ...
நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே,

நாக பட்டினத்தமர்ந்த பெருமாளே. ... நாகப்பட்டினம் என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் (பத்துஊர் புக்கு)



சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், திருவாரூரிலிருந்து திருநாகைக் காரோணத் திறைவரைத் தொழுது பொற்பூணும், மணிப்பூணும், நவமணிகளும், ஆடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியனவும் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 63)


பெரிய புராணப் பாடல் எண் : 84

சேவித்து அணையும் பரிசனங்கள்

         சூழத் திருவா ரூர்இறைஞ்சி,

காவில் பயிலும் புறம்பணையைக்

         கடந்து போந்து, கீழ்வேளூர்

மேவிப் பரமர் கழல்வணங்கிப்

         போந்து, வேலைக் கழிக்கானல்

பூவில் திகழும் பொழில்நாகை

         புகுந்து காரோ ணம்பணிந்தார்.


         பொழிப்புரை : தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திருவாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், `திருக்கீழ்வேளூரைச்\' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடிகளை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.



பெ. பு. பாடல் எண் : 85

திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்

         சென்று பணிந்து, சிந்தையினை

உருக்குஆர் வச்செந் தமிழ்மாலை

         சாத்தி, சிலநாள் உறைந்துபோய்,

பெருக்கு ஆறுஉலவு சடைமுடியார்

         இடங்கள் பலவும் பணிந்துஏத்தி,

அருட்கா ரணர்தம் திருமறைக்காடு

         அணைந்தார் சேரர் ஆரூரர்.


         பொழிப்புரை : திருநாகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தாய இறைவரைப் பணிந்து, சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால், பரந்த செந்தமிழ் மாலையான திருப்பதிககத்தை அருளிச் செய்து சாத்தி, சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து, மேற்சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையையுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, அருளுடைய மூல முதல்வரான இறைவரின் திருமறைக்காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர்.


         குறிப்புரை : திருநாகைக் காரோணத்தில் அருளிய பதிகம் `பத்தூர்புக் கிரந்துண்டு' (தி.7 ப.46) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பதிகமாகும். இடங்கள் பலவும் என்பன பொய்கைநல்லூர், திருவரிஞ்சையூர், திருக்கள்ளிக்குடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத்தலை முதலாயினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.


சுந்தரர் திருப்பதிகம்

ஓதுவார் மயிலை சர்குணதாத தேசிகர்

7. 046  திருநாகைக்காரோணம்    பண் - கொல்லிக்கௌவாணம்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

பத்துஊர் புக்கு இரந்து உண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறிபேசிப் படிறுஆடித் திரிவீர்,

செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித் திரிவீர்,

செல்வத்தை மறைத்துவைத்தீர், எனக்குஒருநாள் இரங்கீர்,

முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை

அவைபூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்

கத்தூரி கமழ்சாந்து பணித்து அருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,



பாடல் எண் : 2

வேம்பினொடு தீங்கரும்பு விரவிஎனைத் தீற்றி,

விருத்திநான் உமைவேண்ட, துருத்திபுக்குஅங்கு இருந்தீர்,

பாம்பினொடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப்

பகட்ட,நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்,

சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கில் திகழும்

திருவாரூர் புக்குஇருந்த தீவண்ணர், நீரே

காம்பினொடு நேத்திரங்கள் பணித்துஅருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .



பாடல் எண் : 3

பூண்பதுஓர் இளஆமை பொருவிடைஒன்று ஏறிப்

பொல்லாத வேடம்கொண்டு எல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையில் பலிகொள்கை தவிரீர்,

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்,

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்புஅரையன் மடப்பாவை பொறுக்குமோ, சொல்லீர்,

காண்புஇனிய மணிமாடம் நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது, வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .



பாடல் எண் : 4

விட்டதுஓர் சடைதாழ, வீணைவிடங் காக,

வீதிவிடை ஏறுவீர், வீண்அடிமை உகந்தீர்,

துட்டர் ஆயினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே,

வட்டவார் குழல்மடவார் தம்மை மயல் செய்தல்

மாதவமோ, மாதிமையோ, வாட்டம் எலாம் தீரக்

கட்டிஎமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .



பாடல் எண் : 5

மிண்டுஆடித் திரிதந்து, வெறுப்பனவே செய்து,

வினைக்கேடு பலபேசி, வேண்டியவா திரிவீர்,

தொண்டுஆடித் திரிவேனைத் தொழும்புதலைக்கு ஏற்றும்

சுந்தரனே, கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத்தே எனக்குப் பணித்துஅருள வேண்டும்,

பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே, நும்மைக்

கண்டார்க்கும் காண்புஅரிதாய்க் கனல்ஆகி நிமிர்ந்தீர்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது, வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .



பாடல் எண் : 6

இலவஇதழ் வாய் உமையோடு எருதுஏறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக்கு எச்சு உச்சம் போது

பலஅகம்புக்கு உழிதர்வீர், பட்டோடு சாந்தம்

பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ,

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றுஅமரர் வேண்ட

உண்டுஅருளிச் செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது, இடவே

கலவமயில் இயலவர்கள் நடமாடும் செல்வக்

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !



பாடல் எண் : 7

தூசு உடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்துஓர் சொல்பாடாய் வந்து

தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்,

நேசம்உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .



பாடல் எண் : 8

மாற்றமேல் ஒன்றுஉரையீர், வாளாநீர் இருந்தீர்,

வாழ்விப்பன் எனஆண்டீர், வழிஅடியேன் உமக்கு,

ஆற்றஏல் திருஉடையீர், நல்கூர்ந்தீர் அல்லீர்,

அணிஆரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டும்,

தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்,

காற்றுஅனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .



பாடல் எண் : 9

மண்உலகும் விண்உலகும் உம்மதே ஆட்சி,

மலைஅரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்,

எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன்று அறியான்,

எம்பெருமான், இதுதகவோ, இயம்பிஅருள் செய்யீர்,

திண்எனஎன் உடல்விருத்தி தாரீரே ஆகில்,

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன், நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லியருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன்; பின்பு, `இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .



பாடல் எண் : 10

மறிஏறு கரதலத்தீர், மாதிமையேல் உடையீர்,

மாநிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்,

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கு இருந்தீர், அடிகேள்,

கிறி உம்மால் படுவேனோ, திருஆணை உண்டேல்,

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேல்ஓர்

பொன்பூவும் பட்டிகையும் புரிந்துஅருள வேண்டும்,

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : மான் கன்று பொருந்திய கையை உடையவரே.  தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடைவாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும், மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .



பாடல் எண் : 11

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றுஆய பெருமானே, மற்றுஆரை உடையேன்,

உண்மயத்த உமக்குஅடியேன் குறைதீர்க்க வேண்டும்,

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்.

கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீர், என்று

அண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார், அமர் உலகுஆள் பவரே.


         பொழிப்புரை : அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள்.


                                             திருச்சிற்றம்பலம்




திருநாவுக்கரசர் பதிகம் 4 (பாரார் பரவும்)


ஓதுவார் ஹரிஹர தேசிகர்


6. 022    திருநாகைக் காரோணம்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

பாரார் பரவும் பழனத் தானை,

         பருப்பதத் தானை, பைஞ்ஞீலி யானை,

சீர்ஆர் செழும்பவளக் குன்றுஒப் பானை,

         திகழும் திருமுடிமேல் திங்கள் சூடிப்

பேர்ஆ யிரம்உடைய பெம்மான் தன்னை,

         பிறர்தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,

கார்ஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :உலகத்தார் போற்றும் திருப்பழனம் , சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய் , எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரிய கடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான் .



பாடல் எண் : 2

விண்ணோர் பெருமானை, வீரட் டனை,

         வெண்ணீறு மெய்க்குஅணிந்த மேனி யானை,

பெண்ணானை, ஆணானை, பேடி யானை,

         பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை,

அண்ணா மலையானை, ஆன்ஐந்து ஆடும்

         அணிஆரூர் வீற்றுஇருந்த அம்மான் தன்னை,

கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் , வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண் ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம் .



பாடல் எண் : 3

சிறையார் வரிவண்டு தேனே பாடும்

         திருமறைக் காட்டு எந்தை சிவலோகனை,

மறைஆன்ற வாய்மூரும் கீழ்வே ளூரும்

         வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே

உறைவானை, உத்தமனை, ஒற்றி யூரில்

         பற்றிஆள் கின்ற பரமன் தன்னை,

கறைஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு , வேதம் முழங்கும் திருவாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய் , எந்தையாகிய சிவலோகனாய் , ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


 

பாடல் எண் : 4

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை,

         ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்

முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை,

         மூவுலகும் தானாய மூர்த்தி தன்னை,

சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்

         செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானை,

கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் , பாச்சிலாச்சிராமம் , ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் , மூவுலகும் தான் பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 5

நடைஉடைய நல்எருது ஒன்று ஊர்வான் தன்னை,

         ஞானப் பெருங்கடலை, நல்லூர் மேய

படையுடைய மழுவாள் ஒன்று ஏந்தி னானை,

         பன்மையே பேசும் படிறன் தன்னை,

மடையிடையே வாளை உகளும் பொய்கை

         மருகல்வாய்ச் சோதி மணிகண் டனை,

கடைஉடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நல்லூரை விரும்பியவனாய் , மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய் , மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 6

புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனை,

         பூம்புகார்க் கற்பகத்தை, புன்கூர் மேய

அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை

         அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை,

இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே

         ஏகாசம் இட்டுஇயங்கும் ஈசன் தன்னை,

கலங்கல் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய் , பூம்புகாரில் உள்ள கற்பகமாய் , அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய் , தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 7

பொன்மணிஅம் பூங்கொன்றை மாலை யானை,

         புண்ணியனை, வெண்ணீறு பூசி னானை,

சின்மணிய மூவிலைய சூலத் தானை,

         தென்சிராப் பள்ளிச் சிவலோகனை,

மன்மணியை, வான்சுடலை ஊராப் பேணி

         வல்எருதுஒன்று ஏறும் மறைவல் லானை,

கல்மணிகள் வெண்திரைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய் , வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் , அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 8

வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தி னானை,

         விரிகோ வணம்அசைத்த வெண்ணீற் றானை,

புண்தலைய மால்யானை உரிபோர்த் தானை,

         புண்ணியனை, வெண்ணீறு அணிந்தான் தன்னை,

எண்திசையும் எரிஆட வல்லான் தன்னை,

         ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,

கண்டல்அம் கழனிசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய் , வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய் , ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 9

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னை,

         தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை,

வில்லானை, மீயச்சூர் மேவி னானை,

         வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்

பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்

         பொறியரவம் மார்புஆரப் பூண்டான் தன்னை,

கல்ஆலின் கீழானை, கழிசூழ் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை , மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய் , ஒளியுடையவனாய் , வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 10

மனைதுறந்த வல்அமணர் தங்கள் பொய்யும்

         மாண்புஉரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்

சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

         மெய்என்று கருதாதே, போத நெஞ்சே,

பனைஉரியைத் தன்உடலிற் போர்த்த எந்தை

         அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்,

கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :நெஞ்சே ! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல் , யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா ? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது .



பாடல் எண் : 11

நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே

         நேர்உருவங் காணாமே சென்று நின்ற

படியானை, பாம்புரமே காத லானை,

         பாம்புஅரையோடு ஆர்த்த படிறன் தன்னை,

செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக்கு என்று

         சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,

கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய் , பாம்புரத்தை விரும்பியவனாய் , பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய் , முடை நாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய் , நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

                                             திருச்சிற்றம்பலம்



திருநாவுக்கரசர் பதிகம் 3 (பாணத் தால்மதின்)


ஓதுவார் ஹரிஹர தேசிகர்

ஓதுவார் மயிலை சற்குருநாத தேசிகர்

5. 083   திருநாகைக்காரோணம்

                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1

பாணத் தால்மதின் மூன்றும் எரித்தவன்

பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்

காணத் தான்இனி யான்கடல் நாகைக்கா

ரோணத் தான்என நம்வினை ஓயுமே.


         பொழிப்புரை : ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் !



பாடல் எண் : 2

வண்டு அலம்பிய வார்சடை ஈசனை

விண்த லம்பணிந்து ஏத்தும் விகிர்தனைக்

கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்

கண்ட லும்வினை ஆன கழலுமே.


         பொழிப்புரை : வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் .



பாடல் எண் : 3

புனையும் மாமலர் கொண்டு புரிசடை

நனையும் மாமலர் சூடிய நம்பனைக்

கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை

நினைய வே,வினை ஆயின நீங்குமே.


         பொழிப்புரை : மாமலர்களைக் கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் .



பாடல் எண் : 4

கொல்லை மால்விடை ஏறிய கோவினை

எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்

கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்

சொல்ல வே,வினை ஆனவை சோருமே.


         பொழிப்புரை : முல்லை நிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் .



பாடல் எண் : 5

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்

கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை

மைஅ னுக்கிய கண்டனை வானவர்

ஐய னைத்தொழு வார்க்குஅல்லல் இல்லையே.


         பொழிப்புரை : உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .



பாடல் எண் : 6

அலங்கல் சேர்சடை ஆதிபு ராணனை

விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்

கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை

வலங்கொள் வார்,வினை ஆயின மாயுமே.


         பொழிப்புரை : மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் .



பாடல் எண் : 7

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை

இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்

கனம்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை

மனம்கொள் வார்,வினை ஆயின மாயுமே.


         பொழிப்புரை : சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் .



பாடல் எண் : 8

அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்து

எந்தை ஈசன்என்று ஏத்தும் இறைவனைக்

கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்

சிந்தை செய்யக் கெடும்துயர், திண்ணமே.


         பொழிப்புரை : ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் .



பாடல் எண் : 9

கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை

இருவ ருக்குஅறி ஒண்ணா இறைவனை

ஒருவ னைஉண ரார்புரம் மூன்றுஎய்த

செருவ னைத்தொழத் தீவினை தீருமே.


         பொழிப்புரை : உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் .



பாடல் எண் : 10

கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்தன்

வடவ ரைஎடுத்து ஆர்த்த அரக்கனை

அடர ஊன்றிய பாதம் அணைதரத்

தொடர அஞ்சும் துயக்குஅறும் காலனே.


         பொழிப்புரை : கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் .

                                             திருச்சிற்றம்பலம்



திருநாவுக்கரசர் பதிகம் 2 (வடிவுஉடை)



4. 103   திருநாகைக்காரோணம்         
   திருவிருத்தம்

ஓதுவார் ஹரிஹர தேசிகர் 

ஓதுவார் மதுரை முத்துக்குமாரன்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

வடிவுஉடை மாமலை மங்கை பங்கா,

         கங்கை வார்சடையாய்,

கடிகமழ் சோலை சுலவு கடல்

         நாகைக் காரோணனே,

பிடிமதவாரணம் பேணும் துரகம்

         நிற்கப் பெரிய

இடிகுரல் வெள்எருது ஏறும்

         இதுஎன்னைகொல், எம்இறையே.


         பொழிப்புரை : அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர்வதன் காரணம் என்ன ?



பாடல் எண் : 2

கற்றார் பயில்கடல் நாகைக்கா

         ரோணத்துஎம் கண்ணுதலே,

வில் தாங்கிய கரம் வேல்நெடுங்

         கண்ணி வியன்கரமே,

நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த

         கரம் நின்கரமே,

செற்றார் புரம்செற்ற சேவகம்

         என்னைகொல், செப்புமினே.


         பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .



பாடல் எண் : 3

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ

         வேள்வி தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்

         நாகைக் காரோண,நின்

நாமம் பரவி நமச்சிவாய

         என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய்,

         எங்கள் சங்கரனே.


         பொழிப்புரை : தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .



பாடல் எண் : 4

பழிவழி ஓடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன், முடியாமைக் காத்துக் கொண்டாய்

கழிவழி ஓதம்உலவு கடல் நாகைக் காரோண! என்

வழிவழி ஆள்ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே.


         பொழிப்புரை : உப்பங்கழி வழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .



பாடல் எண் : 5

செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்

வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்

கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம் என்றும்

சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.


         பொழிப்புரை : சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .



பாடல் எண் : 6

பனைபுரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே,

கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே,

மனைதுறந்து அல்உணா வல்அமண் குண்டர் மயக்கம் நீக்கி

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான்செயும் இச்சைகளே.


         பொழிப்புரை : பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?



பாடல் எண் : 7

சீர்மலி செல்வம் பெரிது உடையசெம்பொன் மாமலையே,

கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே,

வார்மலி மென்முலை யார்பலி வந்துஇடச் சென்றுஇரந்து

ஊர்மலி பிச்சைகொடு உண்பது மாதிமையோ உரையே.


         பொழிப்புரை : சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .



பாடல் எண் : 8

வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்து எம் வானவனே,

எங்கள் பெருமான்ஒர் விண்ணப்பம் உண்டு,அது கேட்டுஅருளீர்

கங்கை சடையுள் கரந்தாய், அக் கள்ளத்தை மெள்ள உமை

நங்கை அறியில் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே.


         பொழிப்புரை : கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .



பாடல் எண் : 9

கரும்தடங் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்

இருந்த திருமலை என்று இறைஞ்சாது, அன்று எடுக்கல் உற்றான்,

பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து, அலற,

இருந்து அருளிச் செய்ததே, மற்றுச் செய்திலன் எம்இறையே.


         பொழிப்புரை : கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .


                                             திருச்சிற்றம்பலம்




திருநாவுக்கரசர் பதிகம் 1 (மனைவிதாய்)


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பாடல் எண் : 291

சோலை மறைக்காட்டு அமர்ந்துஅருளும்

         சோதி அருள்பெற்று அகன்றுபோய்,

"வேலை விடம்உண் டவர்வீழி

         மிழலை மீண்டும் செல்வன்" என,

ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா

         ரோணம் பிறவும் தாம்பணிந்து,

சாலும் மொழிவண் தமிழ்பாடி,

         தலைவர் மிழலை வந்துஅடைந்தார்.


         பொழிப்புரை : சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச் சென்று, கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய நிலையில், உலகில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும், அப்பதி முதலாய பிற பதிகளையும் வணங்கிச் சால்புடைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின் திருவீழிமிழலையை அடைந்தார்.


         குறிப்புரை : திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:


     1.  `மனைவிதாய்` (தி.4 ப.71) - திருநேரிசை.

2.    `வடிவுடை மாமலை` (தி.4 ப.103) - திருவிருத்தம்.

3.    `பாணத்தான்` (தி.5 ப.83) - திருக்குறுந்தொகை.

4.    `பாரார் பரவும்` (தி.6 ப.22) - திருத்தாண்டகம்.


          பிற பதிகளாவன:


1. திருப்பயற்றூர் - `உரித்திட்டார்` (தி.4 ப.32) - திருநேரிசை.

2. திருக்கொண்டீச்சரம்: `வரைகிலேன்` (தி.4 ப.67) - திருநேரிசை. `கண்ட பேச்சினில்` (தி.5 ப.70) – திருக்குறுந்தொகை..



திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 071    திருநாகைக்காரோணம்          
    திருநேரிசை

                                             திருச்சிற்றம்பலம்

ஓதுவார் ஹரிஹர தேசிகர் 

ஓதுவார் மதுரை முத்துக்குமாரன்

பாடல் எண் : 1

மனைவிதாய் தந்தை மக்கள்

         மற்றுஉள சுற்றம் என்னும்

வினைஉளே விழுந்து அழுந்தி,

         வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை

         மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில்

         உய்யலாம் நெஞ்சி னீரே.


         பொழிப்புரை : மனமே ! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம் .


பாடல் எண் : 2

வையனை, வையம் உண்ட

         மால்அங்கம் தோள்மேல் கொண்ட

செய்யனை, செய்ய போதில்

         திசைமுகன் சிரம்ஒன்று ஏந்தும்

கையனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

ஐயனை, நினைந்த நெஞ்சே

         அம்மநாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : எருதை ஊர்பவனாய் , ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய் , செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே ! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும் .



பாடல் எண் : 3

நிருத்தனை, நிமலன் தன்னை,

         நீள்நிலம் விண்ணின் மிக்க

விருத்தனை, வேத வித்தை,

         விளைபொருள் மூலம்ஆன

கருத்தனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால், நாம்

         உய்ந்தவா நெஞ்சி னீரே.


         பொழிப்புரை : மனமே ! கூத்தனாய் , தூயனாய் , நீண்ட இவ்வுலகம் , தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய் , வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய் , தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே .




பாடல் எண் : 4

மண்தனை இரந்து கொண்ட

         மாயனோடு, அசுரர், வானோர்,

தெள்திரை கடைய வந்த

         தீவிடம் தன்னை உண்ட

கண்டனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

அண்டனை நினைந்து, நெஞ்சே

         அம்மநாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தெளிந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும் .



பாடல் எண் : 5

நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம் சூடி

மறைஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,

கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

இறைவனை, நாளும் ஏத்த இடும்பைபோய் இன்பம் ஆமே.


         பொழிப்புரை : கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி , வேதங்களைப் பாடிக்கொண்டு , சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய் , கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும் .


பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை

         வெருவ அன்று உரிவை போர்த்த

கம்பனை, காலன் காய்ந்த

         காலனை, ஞாலம் ஏத்தும்

உம்பனை, உம்பர் கோனை,

         நாகைக்கா ரோணம் மேய

செம்பொனை, நினைந்த நெஞ்சே

         திண்ணம் நாம் உய்ந்த வாறே.


      பொழிப்புரை : கொடிய , பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய் , கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய் , உலகங்கள் துதிக்கும் தேவனாய் , தேவர்கள் தலைவனாய் , நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த நெஞ்சே ! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று .



பாடல் எண் : 7

வெங்கடும் கானத்து ஏழை

         தன்னொடும் வேட னாய்ச்சென்று

அங்குஅமர் மலைந்து, பார்த்தற்கு

         அடுசரம் அருளி னானை,

மங்கைமார் ஆடல் ஓவா

         மன்னுகா ரோணத் தானைக்

கங்குலும் பகலும் காணப்

         பெற்றுநாம் களித்த வாறே.


         பொழிப்புரை : வெப்பம் மிக்ககொடிய காட்டிலே , பார்வதியோடு வேடன் வடிவில் சென்று , அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய் , பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே !.



பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கள் மூன்றும்

         தீயினில் விழ,ஓர் அம்பால்

செற்றவெம் சிலையர், வஞ்சர்

         சிந்தையுள் சேர்வுஇ லாதார்,

கற்றவர் பயிலும் நாகைக்

         காரோணம் கருதி ஏத்தப்

பெற்றவர் பிறந்தார், மற்றுப்

         பிறந்தவர் பிறந்துஇ லாரே.


         பொழிப்புரை : மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .


பாடல் எண் : 9

கருமலி கடல்சூழ் நாகைக்

         காரோணர் கமல பாதத்து

ஒருவிரல் நுதிக்கு நில்லாது

         ஒண்திறல் அரக்கன் உக்கான்,

இருதிற மங்கை மாரோடு

         எம்பிரான் செம்பொன் ஆகம்

திருவடி தரித்து நிற்கத்

         திண்ணம்நாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : மனமே ! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான் . கங்கை , பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று .


                                             திருச்சிற்றம்பலம்