🌷 காசிக்கு அடுத்தபடியாக முத்தி மண்டபம் அமைந்துள்ள திருத்தலம் சிவ ராஜதானி எனப்படும் திருநாகைக்காரோணம் ஆகும்.
🌷 தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற நாகையில் மிக முக்கிய தீர்த்தமான சிவ கங்கை எனும் தேவ தீர்த்தமும், அதன் அருகே காசி விஸ்வநாதரும் பெரிய கோயிலுக்கு அருகே தெற்கு மாட வீதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
🌷 கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌷 திருநாகைக்காரோணம் திருத்தலத்தின் தல புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த மண்டபத்தில் தங்கி அரங்கேற்றம் செய்து உள்ளார்.
🌷 அருட்திரு வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இங்கு தங்கியிருந்ததாகவும் சொல்லப் படுகிறது
🌷 மற்ற திருத்தலங்களுக்கு இல்லாத தனித்துவ சிறப்பு வாய்ந்த இந்த முக்தி மண்டபமும், உற்சவ காலங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்ல பயன்படும்
🌷 மஹா சிவராத்திரியின் போது பெருமக்கள் கூடும் இக்கோயிலுக்கு மற்ற விசேஷ, தினமும் வழிபாடு செய்ய வேண்டுமெனவும், இதன் மகத்துவம் உணர்ந்து இனியும் அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது ஊர் மக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் பணிவான விண்ணப்பம்.🙏
No comments:
Post a Comment