29 Nov 2024

திருநாகைக்காரோணம் தல புராணமும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும்

 



🌷 இன்று திருநாகைக்காரோணம் தல புராணத்தை பற்றியும் இதை எழுதிய மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் அனுபவ குறிப்புகளைப் பற்றியும் பார்ப்போம்.

🌷 நாகை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது. இந்நூல் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்டது.

🌷 இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகள விரிவாகப் பேசுகின்றது. மேலும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைப்பது போல நாகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகத்திற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இத்தல புராணத்தில் விரிவாக உரை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

🌷 சிவ ராஜதானி எனும் நாகை திருத்தலத்தின் பல புராண சிறப்புகளை பற்றிய இந்த ஆவண நூலினை திருவாடுதுறை ஆதினம் வெளியீடு செய்துள்ளது. இதன் பாதிப்பு வெகு சிலரிடமும் மட்டுமே உள்ளது, மேலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியபாடல்களை படித்து புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் மீண்டும் தமிழறிஞர்களை கொண்டு அவற்றிற்கு உரை எழுதி அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட வேண்டும் என்பது பணிவான விண்ணப்பம்.

( பின்னிணைப்பு : நமது கோரிக்கைக்கு ஏற்றார்போல் புத்தகம் புது பதிப்பு பெற்று வெளியாகியுள்ளது, மேலும்  https://m.facebook.com/story.php?story_fbid=188724209693406&id=109859357579892 )

🌷 #நூல்_வரலாறு :

🌷 ​இந்த நூல் தொடர்பான சில குறிப்புக்கள் உ.வே.சா எழுதிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரிதம் நூலில் இடம்பெறுகின்றன. அதில் வரும் செய்திகளிலிருந்து கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிகின்றது.

🌷 1868ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாகப்பட்டணத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியாரும் அவருடன் செல்வாக்கு பெற்ற இன்னும் சிலரும், தேவாரக் திருக்கூட்டத் தலைவராகிய வீரப்ப செட்டியாரும் பிள்ளையவர்கள் நாகைக்கு ஒரு புராணம் பாட வேண்டும் என்ற விருப்பத்தை இவரைச் சந்தித்து தெரிவித்தனர். அதனை பிள்ளையவர்கள் ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு கோயிலின் புராணம் பாடுவதற்கு முன்னர் அத்தலத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு இருந்து, பார்த்து, மக்களிடம் பேசி விவரங்கள் பெற்று, அங்கிருக்கும் பெரியோர்களிடமும் பேசி நகரச் சிறப்புக்களை அறிந்து கொள்வது பொதுவான வழக்கம். அதே போல நாகைக்கு புராணம் எழுது முன்னர் அங்கே சென்று தங்கியிருந்து இந்தத் தொடக்கப் பணிகளைச் செய்ய உத்தேசம் கொண்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்.

🌷 ஏற்கனவே இருந்த இத்தலத்திற்கான வடமொழி புராணத்தை ஸ்ரீ மகாதேவ சாஸ்திரி என்பவரைக் கொண்டு தமிழில் வசன நடையாகவும் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். 

🌷 காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவர் சித்திரக்கவிகளை அமைத்தது போல இப்புராணத்திலும் இருக்க வேண்டும் என சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இப்புராணத்தில் நந்திநாதப் படலத்தில் சித்தாச்சிரம வருணனையில் சில சித்திரக் கவிகளை இவர் செய்திருக்கின்றார்.

🌷 இந்த நூலை பிள்ளையவர்கள் பாடத்தொடங்கியபோது இதனை ஏட்டில் எழுதி வந்தவர் முத்தாள்புரம் கோபால பிள்ளை என்னும் ஒருவர். காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்கு செய்யுள் சொல்வதை முடிப்பாராம்.

🌷 இந்த முத்தாள்புரம் கோபால பிள்ளைக்கு தாம் வெகு விரைவாக செய்யுள் எழுதுகின்றோம் என அகம்பாவம் இருந்திருக்கின்றது. ஒரு நாள் பிள்ளையவர்கள் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தை விரிவாக செய்யுளாக்கிப் பாட கோபால பிள்ளைக்கு கைவலி எடுத்து விட்டது. பகல் 12 மணியாகியும் பிள்ளையவர்கள் செய்யுட் சொல்வதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கின்றார். தனது கை வலி மிக அதிகமாகச் சுவடிக்கட்டை கீழே வைத்து விட்டு பிள்ளையவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கினாராம் இந்த கோபால பிள்ளை. தம்மை போல எழுதுவோர் யாருமில்லை என நினைத்திருந்த தன் அகம்பாவம் இன்று நீங்கியது என்று சொல்லி உருகினாராம்.  

🌷 ​இந்த நாகைப் புராணம் 1869ம் ஆண்டில் சுந்தரவிடங்கப் படலமும் இன்னும் சில பகுதிகளும் நிறைவடைந்தவுடன் தைமாதத்தில் நாகை தலத்திலேயே அரங்கேற்றம் பண்ணுவதென முடிவாக இவர் தம் மாணாக்கர்களுடன் அங்கு சென்று சேர்ந்திருக்கின்றார். 

🌷 முத்தி மண்டபம் எனும் மண்டபத்திலே தான் அரங்கேற்றத்தைத் தொடங்கியிருக்கின்றார்.

🌷 இந்தப் புராணப் பிரசங்கமும் அரங்கேற்றமும் ஒரு வருட காலம் நடைபெற்றிருக்கின்றது. இப்போது நினைத்துப் பார்க்க இப்படியும் நிகழ்ந்திருக்குமா என ஆச்சரியம் மேலிடுகின்றது. 

🌷 இந்த நிகழ்வு நடந்து வரும் வேளையில் ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகள் நாகப்பட்டினத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார். பிள்ளையவர்கள் புராணப் பிரசங்கம் நடைபெறுவதைக் கேட்டு அவரை பார்க்க விருப்பம் கொள்ள பிள்ளையவர்களும் மகாதேவ சாஸ்திரிகளுடன் வந்திருந்து  ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகளை சந்தித்திருக்கின்றார். பிரசங்கம் செய்யும் புராணத்திலிருந்து சில பாடல்களை பிள்ளையவர்கள் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்திருந்திருக்கின்றார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்கள் கேட்க ஆசைப்பட அதனையும் பிள்ளையவர்கள் சொல்லியிருக்கின்றார். 

🌷 இப்புராண அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்  பூரணம் எய்தினார்கள். அவரை அடுத்து இளைய பட்டமாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் ஆதீனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிகழ்வினால் புராணப் பிரசங்கத்தின் இடையில் பிள்ளைவர்கள் திருவாவடுதுறை சென்று மீண்டும் வந்து புராண பிரசங்கத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.  

🌷 பிள்ளைவர்கள் நாகப்பட்டினத்தில் இருக்கும் சமயத்திலேயே மாயூரத்திலிருந்த அரங்ககுடி முருகப்பிள்ளை என்பவரின் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் உதவியால் மாயூரப் புராணமும் அப்பாத்துரை முதலியார்  உதவியால் நாகைக் காரோணப்புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய (இவரும் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்)  மேற்பார்வையில் அச்சிடப்பெற்று நிறைவேறின.

🌷 அரங்கேற்றி முடிவதற்குள் திருநாகைக் காரோணப் புராணமும் பதிப்பிக்கப்பட்டது என்பதும் தனிச் சிறப்பு. புராண அரங்கேற்றம் முடிந்த அந்த நன்னாளில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப் பெற்று மிகச் சிறப்பாக  ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதாம்.

🌷 ஒரு வருடத்திற்கும் மேல் நாகையில் இருந்து 1870ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் பிள்ளையவர்கள் மீண்டும் மாயூரத்திற்கு வருகின்றார்.  பிள்ளையவர்கள் மாயூரம் திரும்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்து தான் உ.வே.சா தன் தந்தையை அழைத்துக் கொண்டு பின்னர் இவரிடம் மாணவராக சேரதேடி வருகின்றார். 

🌷 உ.வே.சாவின் குறிப்புப்படி பிள்ளையவர்களின் புராணக் காப்பியங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம் தான். தமிழ் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய் பலவகையில் நயம் சிறந்து விளங்கும் இக்காப்பியத்தை பெறுவதற்கு  தமிழ் நாடு தவம் செய்திருக்க வேண்டும் என்கின்றார் உ.வே.சா.

காசி_விஸ்வநாதர் & முக்தி_மண்டபம்

 

🌷 காசிக்கு அடுத்தபடியாக முத்தி மண்டபம் அமைந்துள்ள திருத்தலம் சிவ ராஜதானி எனப்படும் திருநாகைக்காரோணம் ஆகும்.

🌷 தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற நாகையில் மிக முக்கிய தீர்த்தமான சிவ கங்கை எனும் தேவ தீர்த்தமும், அதன் அருகே காசி விஸ்வநாதரும் பெரிய கோயிலுக்கு அருகே தெற்கு மாட வீதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

🌷 கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🌷 திருநாகைக்காரோணம் திருத்தலத்தின் தல புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த மண்டபத்தில் தங்கி அரங்கேற்றம் செய்து உள்ளார்.

🌷 அருட்திரு வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இங்கு தங்கியிருந்ததாகவும் சொல்லப் படுகிறது

🌷 மற்ற திருத்தலங்களுக்கு இல்லாத தனித்துவ சிறப்பு வாய்ந்த இந்த முக்தி மண்டபமும், உற்சவ காலங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்ல பயன்படும் 

 

🌷 மஹா சிவராத்திரியின் போது பெருமக்கள் கூடும் இக்கோயிலுக்கு மற்ற விசேஷ, தினமும் வழிபாடு செய்ய வேண்டுமெனவும், இதன் மகத்துவம் உணர்ந்து இனியும் அசுத்தம் செய்யாமல்  இருக்க  வேண்டும் என்பது ஊர் மக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் பணிவான விண்ணப்பம்.🙏



குதிரை வாகன திருவிழா




அனைவருக்கும் #விஜய_தசமி நல்வாழ்த்துக்கள் 🙏. சிவராஜதானி என போற்றப்படும் திரு #நாகை காரோணம் திருத்தலத்தில் பராவர தரங்க நடன சுந்தர விடங்க #தியாகராஜ_சுவாமி நம்பி ஆரூரன் #சுந்தர_மூர்த்தி நாயனாருக்கு #குதிரை வழங்கும் ஐதிக விழா இன்று மாலை வேளையில் தியாகராஜரின்  உடைவாளுடன் சுந்தர மூர்த்தி நாயனாரின் புறப்பாடு நடைபெறும்.

தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு பதிகம் பாடி வந்த சுந்தரர் நாகை திருத்தலத்தில் தனக்கு வேண்டும் பொன் பொருள் ஆகியவற்றை ஓவ்வொரு பாடலிலும் கேட்டு பெறுகிறார்.

தியாகராஜ பெருமானிடம் சுந்தரர் முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை ,காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை மேலும் இறைவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கேட்டு பெறுகிறார்.

மேலும் நயம்பட தனக்கே உரித்தான முறையில் , அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? என குறிப்பிடுகிறார்.

பல தலங்களையும் செய்திகளையும் உள்ளடக்கிய இந்த பதிகத்தில் தனது இரு மனைவிகளையும் சேர்த்து பாடியது இதில் மட்டுமே என்பது தனி சிறப்பு.

இந்த நன்னாளில் சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி தியாகராஜ பெருமானின் அருள் பெறுவோம் ஆக. சிவார்ப்பணம் 🙏 பதிக குரல் காணொளி https://youtu.be/7V72BWGIoBE

1.🌷 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்

செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்

செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை

யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்

கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும்.

2.🌷 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி

விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்

பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்

பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்

சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்

திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே

காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்

கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ! ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும்.

3.🌷 பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்

பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் விரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர்.

4.🌷 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக

வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்

துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே

வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்

மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்

கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீ வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர்.

5.🌷 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து

வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்

தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்

சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்

பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்

கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் அழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்! ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ! 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ? அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும்.

6.🌷 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது

பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்

பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட

உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே

கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீ அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ!

7.🌷 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து

தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்

நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும்.

8.🌷 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்

வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீ நல்கூர்ந்தீ ரல்லீர்

அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்

தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்

காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன்.

9.🌷 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி

மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்

எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்

எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்

திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின, நான் உம்மையுந் தௌய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தௌயமாட்டேன்; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன்? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ? சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா.

10.🌷 மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீ

மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்

கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்

பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  மான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ! படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும்.

11.🌷 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்

உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்

றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

#பொருள் அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

பக்தனை தடுத்து ஆட்கொண்ட நீலாயதாட்சி அம்பிகை

 பக்தனை தடுத்து ஆட்கொண்ட #நாகை #நீலாயதாட்சி 🌷 அம்பிகை ..

#இலங்கை யின் #யாழ்ப்பாணம் மற்றும் #நாகப்பட்டினம் நகருக்கும் உண்டான வர்த்தக தொடர்பு தொன்று தொட்டு நடைபெறுவதாகும். அதன் மூலம் கலாச்சார பண்பாட்டு ஒற்றுமைகளை இவ்வூர்களில் காணலாம்.

🌷 அவ்வகையில் பலரும் இங்கும் அங்குமாக வர்த்தக பயணம் செய்து கொண்டிரிருந்த போது, சுமார் நூறு வருடங்கள் முன் 1910 ஆம் ஆண்டு ஆன்மீகத்தை தேடி பயணபட்டவர் தான் அருளம்பல சுவாமிகள்.

🌷 யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்வழி பயணமாக கோடியக்கரை அடைந்து, #சிதம்பரம் நோக்கி யாத்திரையாக சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு நாள் நாகை அடைந்து நீலாயதாட்சி, காயாரோகண சுவாமியை வழிபட்டு, பின் பயண களைப்பில் அன்றிரவு அங்கேயே தங்க நேர்ந்தது.

🌷 சுவாமிகளின் தாக களைப்பை நீக்கி அருள்புரிய அம்பிகை வாலை சிறுமியாக வந்து நீர் கொடுத்து அவரிடம் எங்கு பயணமாக செல்கிறீர்கள்..? என்று கேட்க.. சுவாமிகள் சிதம்பரம் நோக்கி சித்திகள் பெற செல்வதாக கூறினார்.

🌷 இங்கு சித்திகள் பெற முடியாத என கேட்டு அம்பிகை அவரை சன்னதி அருகில் அழைத்து சென்று தனது நிஜரூப தரிசன காட்சி தந்தது அருள் புரிந்தாள். பின் சுவாமிகள் கோவிலிலே பலகாலம் நிஷ்டையில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார்.

🌷 பல காலம் நீர் உணவின்றி தியானத்தில் அமர்ந்திருந்த இவரை சோதிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள் கம்பியை காய்ச்சி இவர் காலில் சூடு வைக்க மௌனமாகவே இருந்தார், பின் இவரை தனி அறையில் பூட்டி அடைத்து வைத்தனர். சில காலத்தில் நிஷ்டை கைகூடி பூட்டியிருந்த அறையில் இருந்து வெளிப்பட்டு நீலாயதாட்சி ஸ்தோத்திரம், ஊஞ்சல் பாட்டு ஆகியவற்றை இயற்றினார்.

🌷 மீண்டும் சுவாமிகள் யாத்திரையாக 1914 இல் பயன்பாட்டு பாண்டிச்சேரி அடைந்தார் . அச்சமயம் அங்கு தலைமறைவாக தங்கியிருந்த மஹாகவி பாரதியார் சுவாமிகளின் தொடர்பு பெற்று அவரை குருவாக ஏற்று யாழ்ப்பாணத்து சுவாமிகள் என பாடல்கள் இயற்றி உள்ளார்.

🌷 பின் சுவாமிகள் மக்கள் பயன்பெறும் வகையில் பல நூல்களை புதுவை மற்றும் நாகையில் பதிப்பித்து பின் இலங்கை சென்று 1942 மார்கழி மாதம் 3 ஆம் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் மகா சமாதி அடைந்தார். வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

🌷 1943 இல் சுவாமிகள் நினைவாக நாகையில் மடம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.  கால ஓட்டத்தில் மக்களால் இவரது மடம் மறந்து விட்டது.  

🌷 அம்பிகையின் அருள் பெற்று பாரதியாரின் குருவாக விளங்கிய மௌனகுரு அருளம்பல யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை இனிவரும் காலங்களில் மறவாதிருப்போம். 

நாகை பா.சுபாஷ்

சுவாமி பற்றிய விரிவான விவரங்களுக்கு..

https://ourjaffna.com/cultural-heroes/யாழ்ப்பாணத்து-சுவாமி-வி

https://ta.m.wikipedia.org/wiki/மௌனகுரு_அருளம்பல_சுவாமிகள்






மஹா சிவராத்திரி சிவாலயங்களை 12 sivan temple on nagai

 இப்பதிவில் நாகைக்கும் சிவராத்திரிக்கும் உண்டான தொடர்பும் , நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களை பற்றி பார்ப்போம்.

நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், இறுதியாக #நாகை காரோணத்தில், நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான். எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

காசிக்கு இணையாகக் கருதப்படும் சிவராஜதானி ஷேத்திரம் எனக் குறிப்பிடப்படும் நாகையில், காயாரோகணசுவாமி கோயிலை சுற்றியுள்ள 12 சிவாலயங்களை மகா சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது ஆன்மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே பின்வருமாறு.

1. #நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)

2. #அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில் 

(நீலா கீழ வீதி தேரடி அருகில்)

3. #சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)

4. #ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)

5. #நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி)

6. #அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி)

7. #மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி பின்புறம்)

8. #விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. #அமிர்தகடேஸ்வரம் , கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)

10. #கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)

11. #காசிவிஸ்வநாதம், 

காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

12. #அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)

சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம்




பிரதோஷ பெருமாள் (மோகினி) புறப்பாடு

 சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் திருநாகைக்காரோணம் திருத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடு செய்வது மற்ற திருத்தலங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு.

🌷 திருநாகைக்காரோணம் திருத்தலத்தில் திருமால் ஆத்மார்த்தமாக சிவபெருமானை வழிபட்டு தான் இழந்த அழகை மீண்டும்  பெற்றதாக ஐதீகம். எனவே திருமால் இங்கு அழகின் சொரூபமான மோகினி வடிவில் கருவறையில் காட்சி தருகிறார்.

🌷 மகாவிஷ்ணு சிவபூஜை செய்த அழகிய நாதர் சன்னதி தனியாகவும் அதனருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.


#பிரதோஷ_வரலாறு

 🌷 தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து அமுதம் பரிமாறினார். அப்போது, தேவர்கள் பாற்கடல் விஷத்தை அருந்திய சிவனை வணங்காமல் அமுதத்தை அருந்திவிட்டனர். 

🌷 இதற்காக தங்களை மன்னிக்கும்படி, சிவனிடம் வேண்டினர். அவர் தேவர்களை மன்னிக்கும்விதமாக, நந்தியின் மீது நடனமாடினார். இந்த நடனம் பிரதோஷ வேளையில் நிகழ்ந்தது. 

🌷 பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். 

🌷 இவர் பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.







மலையீஸ்வரன் திருக்கோயில் malai eswaran kovil

 அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில், #நாகப்பட்டினம்.

#நாகை_பன்னிரு_சிவாலயங்கள் வரிசையில் இந்த பதிவில் #மலையீஸ்வரன் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

🌷 முற்கால #பல்லவர்கள் திருப்பணி மற்றும் #கோச்செங்கட்_சோழன் கட்டிய மிகப்பழமையான மாடக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

🌷 இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. மொட்டைக் கோபுரத்தின் மேலே சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள். 

🌷 மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் லிங்கத் திருமேனியாக தரிசனம் தருகிறார்.

🌷 மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனிக்கு பின் சிம்மத்தில் ஆன சிற்பத்தின் நடுவே அம்மையப்பர் காட்சியளிக்கிறார். இதுபோல மற்றொரு சிம்ம விளக்குத்தூண் கோயிலின் கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இவையே பல்லவர்கால சிற்பமாக கூறப்படுகிறது.

🌷 மேலும் 1777 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நாகையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த போது இக் கோயிலை புதுப்பித்த கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளது.

#ஸ்தல_வரலாறு

 தைப்பூசம் அன்று பராசர முனிவருக்கு நாகையில் கிடைக்கப்பெற்ற கைலாய தரிசனம்.

 🌷 இறைவனைப் பல்வேறு தலங்களில் காணும்படி யாத்திரையாக நாகைக்கு வந்த வேத வியாசரின் தந்தையான பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. 

 🌷எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். 

🌷 அதன் பயனாக தைப்பூசம் நன்னாளில் சிவபெருமானின் கைலாய தரிசனம் கண்டு, கல்ப காலம் வரை நித்தியத்துவம் பெரும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.




அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் amara nanthiswarar temple

 நாகை பன்னிரு_சிவாலயங்கள் 🌷 வரிசையில் பிரதோஷ தினமாகிய இன்று இந்திரன் வழிபட்ட அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

🌷 நாகை பெரிய கோவில் (நுழைவு வாயில் அருகே) கீழை சன்னதித் தெருவின் முனையில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இந்த ஆலயம், சிறிய கோபுர வாசலைக் கொண்டது. 

🌷 நாகைக் காரோணப் புராணத்தில் #அமரேந்திச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில், அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று .

🌷 ஆலயத்தின் பிரதான அம்பிகை #அபித_குஜாம்பாள் மற்றும் கோஷ்டத்தில் உள்ள #சூலினி_துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து அருள் புரிகின்றனர். 

🌷 மேலும் விநாயகர், பாலமுருகன், லட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளது.

🌷 ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது. தற்போது இக்கோயில் திருவாடுதுறை ஆதின சைவ சித்தாந்த மற்றும் திருமுறை நேரடி பயிற்சி மையம், நாகப்பட்டினம் கிளை உறுப்பினர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🌷 இங்கு பங்குனி மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் பெருவிழாவாக சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

புராண வரலாறு: 

🌷 அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. 

🌷 தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு நற்கதி பெற்றான். பின் ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான்.

🌷 இம்மூர்த்திக்கு அமரனந்தீசுவரர் என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன




ஹேரம்ப கணபதி heramba ganapati




 "திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்

சகடச் சக்கர தாமரை நாயகன்

அகடச் சக்கர விண்மணி யாவுறை

விகடச் சக்கரன் மெய்ப்பதம்            போற்றுவாம்'

      - கந்தபுராணம்

"திகடச்சக்கர'  என்பது "திகழ் தசக் கர' என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

2. ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் மலர்ப் பதம் பணிந்தேன்

அஞ்சு முகம் கொண்ட ஆனைமுகத்தோன்

ஈரைந்து கரங்களில் பரசும் பாசாங்குசமும்

ஆரமும் மோதகமும் தந்தமுமேந்திய

சூரியனை மிஞ்சும் காந்தியுடையவன்

மாறனும் நாணுறும் பேரெழில் வடிவினன்

பாரெங்கும் புகழ் விளங்கும் கேசவன் மருகன்

வாரணமுகத்தோன் வருமிடர் களைபவன்


ஐந்து முகத்துடன் சிம்மத்தின் மீது அருளும் #ஹேரம்ப_கணபதி, மிகவும் அரிதான இந்த மூர்த்தி #நாகை மற்றும் தமிழகத்தில் சில ஆலயங்களில் மட்டுமே வழிபாட்டில் உள்ளார்.

ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.

ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

 பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம்.



நாகையில் தசரதர் வழிபட்ட சனீஸ்வரர் nagai sani bagavan

சனீஸ்வரர், ரோகிணி நட்சத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தில், "ரோகிணி சகடபேதம்' என்னும் பஞ்சம் உண்டாகும். அயோத்தியை ஆட்சி செய்த தசரதர் (ஸ்ரீ ராமரின் தந்தை), தனது நாட்டில் இந்த பஞ்சம் உண்டாகப்போவதை அறிந்தார். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி அவர், சனீஸ்வரனை எதிர்த்து போரிடச் சென்றார். 

🌷 அப்போது சூரியபகவான் அவரிடம், சனியை வெல்வது எளிதல்ல என்றும், அவரை எதிர்ப்பதை விட, பணிந்து வணங்குவது நல்லது என்றும் அறிவுரை கூறினார். அதன்படி தசரதர், நாகையில் உள்ள சிவனை வழிபட்டு, சனீஸ்வரரின் பார்வையிலிருந்து தப்ப அருளும்படி வேண்டினார். சிவனின் ஆணையால், சனீஸ்வரர் தசரதருக்கு காட்சி தந்தார். அவரிடம் தன் நாட்டில் பஞ்சம் ஏற்படாதிருக்க அருளும்படி வேண்டினார். 

🌷 சுயநலமின்றி நாட்டு நலனுக்காக தன்னையே எதிர்க்கத் துணிந்த தசரதனைக் கண்டு மகிழ்ந்த சனீஸ்வரர், அவரை பாராட்டியதோடு, பஞ்சம் ஏற்படாமல் அருளினார். இவர், தசரதரின் வேண்டுதலுக்காக இங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினார்.

இவருக்கு அருகில், நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சிவனை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கியிருக்கின்றன.

வழிபடும் முறை:

🌷 இங்கு நவக்கிரகத்தை சுற்றி முடித்து தெற்கு நோக்கிய சனிபகவானே பக்காவாட்டில் நின்றவாறு மேற்கு நோக்கி சனி பகவானின் பாதத்தையும் , நமக்கு நேரெதிரே கிழக்கு நோக்கி அமைந்த மகாலட்சுமி சன்னதியை வணங்குவது சகல ஐஸ்வர்யம் தரும் என்பது ஐதிகம்.

🌷 வடமொழியில் தசரதர் இயற்றிய சனிபகவான்  ஸ்தோத்திரம் ..

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

நம கிருஷ்ணாய நீலாய 

சதகண்ட நிபாய ச

நமகாலாக்னிரூனாய 

க்ருதாந்தாய ச வை நம

நமோ நிமலாம்ஸ தேஹாய 

தீர்கச்மரு ஜடாய ச

நமோ விசால நேத்ராய 

சுக்ஷ்கோதர பயாக்ருதே

நம புஷ்கல காத்ராய ஸ்தூல 

ரோம்ணேத வை நம

நமோ தீர்க யசுஷ்காய 

காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய 

துர்நிரீச்ரயாய வை நமே

நமோ கோராய ரெளத்ராய 

பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து 

பாஸ்கர பயதாய ச

அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தகத் தேஹாய 

நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய 

அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே

துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...

இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :

🌷 கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன். 

🌷 பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

🌷 சனிபகவானே, நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.

🌷 ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

🌷 மஹா பகவானும், பயங்கரமனவனும், கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , "ஏ ராஜேந்திரா, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .

அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் 

அழகுமுத்துப்புலவர் முருகனோடு ஐக்கியமகிய சித்திரைச் சதயத் திருநாள் nagai kumaran kovil alagumuthu pulavar

 


நாகப்பட்டினம் திருநகரில் தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு என எழுப்பப்பட்ட தனிப்பெரும் கோட்டமே குமர கோயிலாகும். 

இக்கோயிலின் மெய்க்காவலராக பணியில் இருந்த அழகுமுத்து என்பவர், முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். சிறுவயது முதலே, நோய் வாய்ப்பட்டிருந்த, அழகுமுத்து, கல்வி கற்கவில்லை. ஆனால், கல்வியின் பயன் நல்லொழுக்கம் என்பதற்கு ஏற்ப, அதில் தலைசிறந்து விளங்கினார். சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை, மனதிற்குள்ளாகவே உருவேற்றி வந்தார். இவர் இரவு வழிபாடு முடிந்து, பிரசாதம் பெற்று, உண்டபிறகே வீடு திரும்புவார். ஒருநாள், குளிர் மிகுதியாலும், நோய் தொல்லையாலும், பசியின் கொடுமையாலும், மனம் நொந்த அழகுமுத்து, வாகனங்கள் வைக்கும் இடத்தில் படுத்து உறங்கி விட்டார்.

இரவு பூஜை முடிந்து, பிரசாதம் கொடுப்பதற்காக அழகுமுத்துவை தேடிய குருக்கள், அவரை காணாமல், வீட்டிற்கு போய் விட்டதாக எண்ணி, கோவிலைப் பூட்டி கிளம்பி விட்டனர்.

நள்ளிரவு தாண்டியது. விழித்தெழுந்தார், அழகுமுத்து. நடந்ததைப் புரிந்து கொண்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் படுத்தவர், துாங்கி விட்டார்.

சற்று நேரத்தில், மடப்பள்ளி பணியாளர் வடிவில், பிரசாத தட்டோடு வந்து, அழகுமுத்துவை எழுப்பி, அவருக்கு உணவளித்தார், முருகப்பெருமான்.

ஆர்வத்தோடு அதை உண்ட அழகுமுத்து, மறுபடியும் படுத்து உறங்கி விட்டார்.

 அவரின் கனவில் காட்சியளித்த, முருகன், 'அன்பனே, அழகுமுத்து... எம் மீது பாடல்கள் பாடுவாயாக...' என்று உத்தரவிட்டார்.

'ஐயா, ஆறுமுகா... படிப்பறிவு இல்லாத அடியேன், உன்னை எப்படி பாடுவது...' என, தழு தழுத்தார்.

'பாடுவாய்...' என்று அருளியபடி மறைந்தார், முருகப்பெருமான்.

கனவு கலைந்தது. அழகுமுத்துவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவரை அறியாமலே பாடத் துவங்கினார். இதற்குள் பொழுது விடிந்தது.

கோவில் கதவுகளைத் திறந்து, உள்ளே வந்த குருக்கள் முதலானோர், அழகுமுத்துவிடம் விசாரித்து, நடந்ததை அறிந்து கொண்டனர். நோய் நீங்கி, பளபளத்த திருமேனியோடு பைந்தமிழில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அழகுமுத்துவுக்கு, 'அழகு முத்து புலவர்' என, பெயர் சூட்டினர்.

அதன்பின், நாகையை விட்டுப் புறப்பட்ட, அழகுமுத்து, சிவத்தல யாத்திரை மேற்கொண்டார்.

காசி சென்று திரும்பியவர், சீர்காழியில் ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். #சித்திரை சதயத் திருநாளன்று, தன் உடம்பை விட்டு, ஆறுமுகன் திருவடிகளை அடைந்தார்.

அழகுமுத்து, தன் உடம்பை உகுத்த அதே வேளையில், நாகப்பட்டினம், தெற்கு தெரு, மெய்கண்ட வேலாயுதர் கோவிலில், மாலை, வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கே கருவறையில் நுழைந்தார், அழகுமுத்து. கந்தன் திருவடிகளில் கலந்து மறைந்தார்; அனைவரும் திகைத்தனர்.

சன்னிதியில் அழகுமுத்து புகுந்து மறைந்த அதேவேளையில், சீர்காழியில் சித்தி அடைந்ததாக தகவல் கிடைத்தது.

தலைசிறந்த சிவன் அடியார்களான அறுபத்த மூன்று நாயன்மார்களைப் போலவே, சேய்த் தொண்டர்கள் என்றழைக்கப்படும் எழுபத்து எட்டு முருக பக்தர்கள் உள்ளனர். அகத்தியர், அவ்வையார், அருணகிரியார் என்று தொடரும் அந்த வரிசையில் உள்ளோருள் ஒருவர்தான். இந்த 'அழகு முத்து நயனார்' 

“சுழறும் கடல் நாகை மெய்கண்ட வேலன் கழல் வணங்கி 

விழவயர் ஆலய மெய்க்காவல் தொண்டு மிகப் புரிந்த

சூழகன் பெயரால் சதகம் திறப்புகழ் கூறி உய்ந்த

அழகு முத்து என்னும் ஒரு குணக்குன்று என் அகத்துற்றதே"

என்று புலவர் அழகு முத்துவைப் புகழ்கிறது சேய்த் தொண்டர் திருவந்தாதி

இத்தகைய சிறப்பு வாய்ந்த அழகுமுத்து புலவர் பற்றியும்,  இவர் முருகன் மீது இயற்றிய "மெய்கண்ட வேலாயுத சதகம்" மற்றும் "திறப்புகழ்"  நூல் பற்றியும் அனேகமானவர்கள் அறிந்திருக்கவில்லை.  அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் போன்ற பல சந்த பாக்கள் நிறைந்த இந்நூலினை பொருளுரையுடன் மீண்டும் பதிப்பித்து அவற்றிற்கு இசை வடிவம் பெற வேண்டும் என்பது விண்ணப்பம். 

#முருகா_சரணம் 🙏



அப்பர் மடம் / நடராஜர் மடம்

திருநாவுக்கரசர் நாகையம் பதியில் காரோண பெருமானை பதிகம் பாடி உழவார பணி செய்ததன் நினைவாக அமைந்துள்ள அப்பர் மடம் தற்போது நடராஜர் மடம் என்ற பெயரில் நாகை முதலாம் கிழக்கு கடற்கரை சாலை அடுத்த ஆரியநாட்டு தெருவில் அமைந்துள்ளது.  





ஆவணி மூலம்

நாகப்பட்டினமான சோழகுலவல்லிப்பட்டினத்து ஊரார் மன்னன் சுந்தரபாண்டியனின் பிறந்தநட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் இறைவன்

வீதி உலாச் சென்று தீர்த்தமாடவும், வழிபாட்டுச் செலவுகளுக்காகவும்

சன்னமங்கலத்தில் 14 1/2 நிலம் கொடுத்தமையைக் குறிக்கிறது.


ஆவணி மூலம் முன்னிட்டு ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் கல்யாண சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவை குறிப்பிடும் விதமாக இக்கோயிலில் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது சிறப்பு செய்தி ஆகும்.




மாசிமக திருவிழா

 பழந்தமிழர் கொண்டாடிய திருவிழாக்களில் இன்றளவும் விடாமல் பல நூறு ஆண்டுகளாக சீரும் சிறப்புமாகக் கொண்டாப்படும் விழா மாசிமகம் திருவிழாவாகும். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரம் சிம்மராசிக்குரியது. மாசிமகம் அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்மராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் கோவில்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தநாளாக #கடலாடும்விழா எனும் சிறப்புப் பெயருடன் மாசிமக பெருவிழா கொண்டாடப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசிமகம், குடந்தையில் பெரும் திரளான மக்கள் கலந்துக் கொள்ளும் #மகாமகம் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும், வடநாட்டில் கும்பமேளா எனும் பெயரில் சிறப்பாக. கொண்டாடப்படுவதும் அனைவரும் அறிந்ததே...

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவிழாவான மாசிமகம் தமிழர்களால் சீரும் சிறப்புமாகக் சங்க காலம் முதலே கொண்டாடப்பட்டதற்கு  நமக்கு புறநானூறு, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன. அதன்பின் பல்வவர் காலத்தில் திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுவது மூலம் மாசிமக விழா அப்போதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதை காண்கிறோம். அதன் பின் பிற்காலச் சோழர்கள் எழுச்சிப் பெற்ற பின் மாசிமகம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கு நிறைய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. மாசிமக விழா என்று ஒரு நாள் மட்டுமல்லாமல் 6 முதல் 10 நாட்கள் வரை பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கு நமக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. 

முதலில் நாம் காண இருப்பது நாகப்பட்டினம் திருக்காரோணமுடையார் கோவிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு! நாகப்பட்டினத்து ஊர்சபையினர் மாசிமக திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் இறைவனுக்கு திருவிளக்கெரிக்கவும், திருவமுது படைக்கவும் தானமாக இரண்டே ஏழுமா அளவுள்ள நிலத்தை வழங்கியதை குறிக்கும் சிறப்பானக் கல்வெட்டு இது. நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகையில் சேனாமுகத் துர்க்கையார், ஆரியச்சாலை துர்க்கையார், மடிகைத் துர்க்கையார் என்ற பல துர்க்கை கோவில் தேவதான நிலங்களும், அந்திரி சேந்தமான செம்பியன் மாதேவி தலைக்கோலி, வணிகன் கலியன் மாவேன் ஆன ராஜராஜ தோன்றி சிலேட்டி, வெங்கடவன் ஆதித்தன் போன்றோரின் நிலங்களும் தானம் தந்த நிலத்தின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இதிலிருந்து நாகை ஊர்மக்கள் ஆறு தினங்கள் சோழர் காலத்தில் சீரும் சிறப்புமாக மாசிமக பெருவிழாவை கொண்டாடியதை அறியலாம்...!

#திருக்காரோணமுடையார் 

#நீலாயதாட்சி_அம்மன்_திருக்கோயில்

#ராஜேந்திரசோழர்

#நாகப்பட்டினம்

#சோழமண்டலவரலாற்றுத்தேடல்குழு




நாகை நாகநாதர் திருக்கோயில் nagai naganathar temple

 



குழந்தைப்பேறு இல்லாது தவித்த ஆதிசேஷன் ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான் .

🌷 அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோயிலிலும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும், மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும், நிறைவாக நான்காம் காலத்தில்  நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை, தீர்த்தம் அமைத்து வழிபட்டு  வந்தான்.

🌷 இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார் , நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே வழங்கலாயிற்று.

🌷 இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றான், ஆனால் அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மனவேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டான். அப்போது "அசரீரியாக" ஆதிசேஷனே வருந்தாதே அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது.

🌷 ஆதிசேஷனின் மகளான நாக கன்னிகை  காயாரோகண சுவாமியையும், நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவ்வேளையில் ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது ஸ்தனம் மறையவே இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். பிலாத்துவாரம் வழியாக நாகலோகம் அடைந்த சாலிசுகனை ஆதிசேஷன் வரவேற்று தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தான் என்பது தலபுராணம்.

#நாகை_காரோணம்

அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் alagiyanathar sivan kovil

 

திருமால் சிவபெருமானை வழிபட்டு தன் அழகை மீண்டும் திரும்பப் பெற்ற இந்த அழகிய நாதர் திருக்கோயில், சிவ ராஜதானி என போற்றப்படும் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். 

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக்கோயில் கருங்கல் திருப்பணிகள் ஆன ஒரு அழகிய கற்றளி ஆகும். ஆலய நுழைவாயில் மொட்டை கோபுரத்தில் விநாயகர், முருகர் ரிஷபத்தின் மீது அம்மையப்பர், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் அவரவர் வாகனத்தில் அமைந்த படி சுதை சிற்பம் அமைந்துள்ளது. மேலும் அதன் பின்புறத்தில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்யும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை கடந்து நந்தியம் பெருமானே வணங்கி நேராக உள்ளே சென்றால் சற்று உயரமான கருவறையில் நீண்ட பானத்துடன் லிங்கத் திருமேனியாக அழகிய நாதர் காட்சி கொடுக்கிறார். அம்பிகை தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன் "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" என்றாற் போல் அழகம்மை எனும் சௌந்தரவல்லி ஆக அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடையும் பொழுது வாசுகி நாகத்தி டமிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு மகாவிஷ்ணுவின் உடல் கரிய நிறமாக மாறி ரோகம் ஏற்பட்டது. மீண்டும் தனது அழகை பெற திருமால் நாகைக்கு வந்து காயாரோகண சுவாமியை வணங்கி பின் தனியாக லிங்க பிரதிஷ்டை செய்து அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். 

சிவபெருமானும் திருமாலுக்கு காட்சியளித்து ரோகம் நீக்கி, கரிய நிறத்திலும் நீ அழகு பெறுவாய் என வரமளித்தார். தனது அழகை மீண்டும் பெற்ற திருமால் நீலமேகப்பெருமாள்,(சௌந்தர்ராஜன்) என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார். 

 இதன் காரணமாக தான் நாகை பெரிய கோயில் காயாரோகணேஸ்வரர் 

சன்னதியில் பிரதோஷ காலங்களில் திருமால் மோகினியாக புறப்பாடாகிறார். சிவாலயங்களில் பிரதோஷ புறப்பாட்டின் போது திருமாலும் புறப்படுவது நாகப்பட்டினம் திருத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. திருமாலின் மோகினி வடிவத்தை பிரதோஷ காலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் கருவறையிலிருந்து சிவபெருமானை ஆத்மார்த்த பூஜை செய்வதாக ஐதீகம். 

இக்கோயில் நகரின் மையத்தில் 

நான்கு கால் மண்டபத்திலிருந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.





அருள்மிகு நடுவதீஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் || naduvatheeswarar temple nagapattinam



நாகப்பட்டினம் நகரின் கோயில்களுக்கு  நடுநாயகமாக விளங்குவதால் இக்கோயிலுக்கு நடுவர் கோயில் எனவும், வடமொழியில் மத்தியபுரி என்றும் குறிப்பிடுவர். நாகை பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாக உள்ள இக்கோயில் தேசிய மேல்நிலைப்பள்ளி பின்புற சாலையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. 

இக் கோயிலுக்கு முன்பாக மத்தியத்தலேச விநாயகர் அருள்பாலிக்கின்றார். கோபுரத்தை கடந்து சென்றால் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றுக்கு அடுத்தாற்போல் மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. கொடிமரத்தின் கீழே பிரம்மா மற்றும் எமன் சிவலிங்க வழிபாடு செய்வது போன்ற தல புராணத்தை குறிக்கும் வகையில் சிற்பம் உள்ளது. 

இங்கு கிழக்கு நோக்கி லிங்கத்திருமேனியாக சிவபெருமான் மத்திய புரீஸ்வரர் மற்றும் நடுவதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக் கருவறையில் ஒரு நிலவறை உள்ளதாக சொல்லப்படுகிறது. அம்பிகை தெற்கு நோக்கி சௌந்தர நாயகி எனும் திருநாமத்துடன்  அருள்புரிகிறாள்.

தல வரலாறு 

ஊழிக் கால பிரளய அழிவிற்குப் பின், உலகப் படைப்பிற்காக திருமாலின் ஆலோசனைப்படி பிரம்மா இத்தலம் வந்து சிவலிங்க பிரதிஷ்டையும், தீர்த்தமும் அமைத்து வழிபட்டு தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். இந்த பிரம்ம தீர்த்தம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. 

மேலும்  திருக்கடையூரில் சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்து உயிர்ப்பித்த பின், தனது தவறுக்கான தோஷ நிவர்த்திக்காக எமதர்மன் நாகை வந்து இத்தல ஈசனை தீர்த்தம் அமைத்து வழிபட்டு விமோசனமும், இழந்த பதவியையும் பெற்றான். எனவே இந்த எம தீர்த்தத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து எமவாதனை உள்ளவர்களுக்கு கொடுக்கும் பொழுது மித்ரு பயம் நீங்கி சிவபதவி அடைவார் என நம்பப்படுகிறது.

உயிரின் தொடக்கம் மற்றும் முடிவுக்கான தேவதைகளான பிரம்மா மற்றும் எமன் வழிபட்ட இந்த அற்புதத் தலத்தை தவறாது தரிசனம் செய்து இறைவன் அருள் பெறுக..  




ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம்

திருநாகைக்காரோணம் ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம் திருவிழா ..!!


தற்போதைய சூழலும்..

தலபுராண குறிப்புகளும் ..

சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது சேத்திரமாக விளங்கக்கூடிய #நாகை திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் "ரத்தின சிம்மாசன பாரா வாரா தரங்க நடன ஸ்ரீ சுந்தர விடங்கர் தியாகராஜப் பெருமானுக்கு" #வைகாசி விசாகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெறுவது தற்போதைய வழக்கமாக இருக்கிறது. 

கடந்த 2018 ~ 19 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்ற பிறகு திருத்தேர் பழுது காரணமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகள் (2020 - 2021) பெரும் தொற்றின் காரணமாகவும் திருவிழா தடைபட்டது. பின்னர் இவ்வருடம் (2022) திருக்கோயில் திருப்பணிக்காக #பாலஸ்தாபனம் ஆகியதால் விழா ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னரே திருவிழா நடைபெறும் சூழலால் திருவிழாவானது மேலும் கடந்து செல்கிறது. 

நிற்க

இவை ஒருபுறமிருக்க.., 

பல (~50) வருடங்கள் கழித்து நமது எதிர்பார்ப்பின் படி  மறுபதிப்பாகிய தல புராணத்தை நோக்கும் போது அதிலிருந்து பல அரிய தகவல்களும், பிரம்மோற்சவம் பற்றிய குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றின்படி நாகைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய (சுந்தர) விடங்கருக்கு 

#ஆனி மாதம் #அஸ்தம் நட்சத்திரம் #கொடியேற்றம். அதிலிருந்து பதினெட்டாம் நாளில் அஷ்ட திக்குகளிலும் கொடியேற்றமும், இருபத்தி நான்காம் நாள் #திருத்தேர் விழா, இருபத்தி ஏழாம் நாளில் அமைந்த #உத்திரம் நட்சத்திரம் அன்று #தீர்த்தவாரி என்ற குறிப்புகள் கிடைத்துள்ளன. 

திருக்கோயிலில் தற்போது நடைபெறும் விழா காலத்திற்கும், ஸ்தல புராணத்தில் உள்ள குறிப்புகளுக்கும் மாறுபாடு உள்ளதை முன்பே அறிந்திருந்தும்,  இதுபற்றி ஆலய தலைமை குருக்களிடம்   நேரடியாக கலந்தாலோசிக்கும் வாய்ப்பு தற்போதே கிட்டியது. அதிலிருந்து இந்த கால மாற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்று யூகித்ததிலிருந்து எனது சில கருத்துக்கள் ..,

முந்தைய தலைமுறைக்கு முன் பல காலங்கள் பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்திருந்து, பின்னர் அதற்கான ஏற்பாடுகள் செய்யும் பொழுது மற்ற (திருநள்ளாறு, திருக்காறாயில், திருக்குவளை, திருவாய்மூர்) விடங்கத் தலங்களில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவதால், அத்தோடு ஒத்திசைந்து இங்கும் இவ்வாறு மாறியிருக்கலாம்..!!

(திருவாரூரில் பங்குனி மாதமும் வேதாரணியத்தில் மாசி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது)

இருபத்தி ஏழு நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி மாத உற்சவம் முந்தைய வைகாசி மாதத்தில் இருந்து துவங்கி இருந்து பின்னர் அவை நாட்கள் குறந்து உற்சவமாக மாறியதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய (செய்யுள் வடிவ) திருநாகைக்காரோணம் தலபுராணம், 

~ 1869 ஆம் ஆண்டு புத்தக பதிப்பாகியுள்ளது , அதன் பிறகு செய்யுள் வடிவத்திற்கு குறிப்புரையுடன் 1970 ஆம் ஆண்டு ஆம் திருவாடுதுறை ஆதீனத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த தலபுராண பிரதிகள் சில (ஓரிரு) அன்பர்களிடம் மட்டுமே செல்லரித்து எஞ்சி இருக்கிறது. இதனால் மேற்கூறிய பிரம்மோற்சவம் பற்றிய தலபுராண விவரங்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

( விளக்க உரையுடன் தலபுராணம் மீண்டும் பதிப்பாக வேண்டுமென்ற கோரிக்கையை அடுத்து சென்ற (2021) வருடம் டாக்டர் உ வே சா நூலகத்தின் வாயிலாக நூலானது பதிப்பாகியுள்ளது.)

ஆக..

இவ்வாறாக பல வருடங்கள் கழித்து சுவாமி அருளால் தற்போது வெளியான தலபுராண நூலிலிருந்து பல அரிய செய்திகள்  வெளிப்படுகிறது. உரிய காலத்தில் சுவாமி அனுக்கிரகம் கிடைக்கும்போது அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் என்ற ஆலய சிவாச்சாரியார் கூறிய வாக்கின்படி,  தொடர்ந்து தடைபட்டு வரும் பிரம்மோற்சவம் ஆனது விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வெகு விமர்சையாக ஸ்தல புராண தகவலில் உள்ளபடி நடைபெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வோம்.

#காரோணா..  #தியாகேசா ..






28 Nov 2024

முத்துசுவாமி தீட்சிதர் கிர்தனை 3

 ஸி1வ காயாரோஹணேஸா1ய - ராக3ம் ருத்3ர ப்ரிய - தாளம் ரூபகம்


பல்லவி

ஸி1வ காயாரோஹணேஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரதா3ப4ய கராய

(மத்4யம கால ஸாஹித்யம்)

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீலாயதாக்ஷீ மனோஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


Back

Tamil - Word Division

பல்லவி

ஸி1வ காய-ஆரோஹண-ஈஸா1ய நமஸ்தே ஸ்ரீ


ஸமஷ்டி சரணம்

ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2த

வரத3-அப4ய கராய

பு4வன த்ரய மோஹிதாய

போ4க3 மோக்ஷ விதரணாய

நீல-ஆயத-அக்ஷீ மனோ-ஹராய

கு3ரு கு3ஹ முதி3தாய


pallavi

Siva kAyArOhaNESAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varadAbhaya karAya

(madhyama kAla sAhityam)

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIlAyatAkshI manOharAya

guru guha muditAya


kshEtra - nAgappaTTinam - Siva rAjadhAnI


kAyArOhaNa - The term ‘kAyArOhaNa sthalaM’ means 'a shrine where all beings become one with Lord ziva during the great deluge'. The name kAyArOhaNa is associated with the Lakulisa Pasupata Saiva sect which originated in Gujarat. This sect of saivism is said to have been widespread in Tamilnadu during the days of Mahendravarma Pallavan. There is a temple with the same name at Gujarat - kArvAn - kAyArohaNa svAmi (barODa).

kAyArOhaNa-1; kAyArOhaNa-2


Back

English - Word Division

pallavi

Siva kAya-ArOhaNa-ISAya namastE SrI


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita

varada-abhaya karAya

bhuvana traya mOhitAya

bhOga mOksha vitaraNAya

nIla-Ayata-akshI manO-harAya

guru guha muditAya

Meaning

pallavi

namastE                       - Salutations to you,

Siva kAya-ArOhaNa-ISAya       - to (you who are) Shiva known as Kayarohanesha,


samashTi caraNam

Siva rAjadhAnI kshEtra sthita - the one residing in the sacred place Shiva-Rajadhani (Nagapattinam),

varada-abhaya karAya          - the one whose hands gesture assurance of fearlessness and granting of boons,

bhuvana traya mOhitAya       - the one who enchants the three worlds,

bhOga mOksha vitaraNAya       - the one who gives away both enjoyment and liberation,

nIla-Ayata-akshI manO-harAya - the one who captivates the heart of Goddess Nilayatakshi,

guru guha muditAya           - the one who delights Guruguha.


Comments

This Kriti is in the fourth VibhaktiIn Nagapattinam, the lord granted salvation to Pundarika Rishi with his mortal body and so is called Kayarohaneshvara.


சியாமா சாஸ்திரி கீர்த்தனை 2

 பல்லவி

நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளி(னா)க்ஷீ (நன்னு)


பல்லவி
என்னைக் காக்கலாகாதா? ஓ பல்லுலகத் தாயே!
நீ கருணை காட்டுவாயம்மா.

அனுபல்லவி
ஈன்ற தாய் நீயே, அம்பா!
எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?

சரணம் 1
ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ!
ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக. கருந்தடங்கண்ணீ! பவானீ!

சரணம் 2
கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ!
மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!

சரணம் 3
சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ!
சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!

கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்


Word Division

பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3த்-அம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம் 1
ஆதி3 ஸ1க்தி மஹா-ஈஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீல-ஆயத-அக்ஷீ ப4வானீ (நன்னு)

சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலிதா-அம்பி3கே வரதே3 (நன்னு)

சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ நாத3 ரூபிணீ நளின-அக்ஷீ (நன்னு)

http://syamakrishnavaibhavam.blogspot.com/2011/06/syama-sastry-kriti-nannu-brova-rada.html?m=1