ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் || வாரானைப் பருவம்
தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்
சச்சிதா னந்தசாந்தர்
தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்
தருமட்ட வித்தியேசுரர்
பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து
பேதமா மாகேசுரர்
பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்
பிருங்கியுட னைங்கரத்தோன்
பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் டிசைநாதர்
போற்றுந்த சாயுதங்கள்
பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்
புகழ்கொண்ட தேவர்முனிவர்
காணவரு சிவராச தானியெனு நாகைவரு
கந்தசுவா மிவருகவே
கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்
கருணையங் கடல்வருகவே.
- காஞ்சி சிதம்பர முனிவர்
- தாணு - உருத்திரன். அட்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சீகண்டி என்னும் எண்மர். இவர் அதிகா ரமலம் ஒன்றே உடையவர்.
------------------------------------------------------------------------------
தூத்தகைய பாகைக்கார் என்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
நாகைக்கா ரோணம் நயந்தோனே –
பொருள்
காய்ச்சிய பாகு கசப்பு என்று சொல்லும்படியான, தூய அழகிய, பணிவான சொற்களைப் பேசும்
மங்கையர் வாழ்த்தும் ஒலி எப்போதும் ஒலிக்கும் திருநாகைக்காரோணத்து சிவபெருமானே
உம்மை வணங்குகிறேன்.
திருவருட்பிரகாசவள்ளலார் – விண்ணப்பக்கலிவெண்பா
No comments:
Post a Comment